சாவர்க்கர் 136…இந்துத்வாவின் தந்தை பிறந்த தினம்

 

சாவர்க்கர் 136…இந்துத்வாவின் தந்தை பிறந்த தினம்

மகாராஷ்டிராவில் உள்ள நாசிக்கில் 1883-ம் வருடம் மே 28-ம் தேதி பிறந்த சாவர்க்கரின் முழுப்பெயர் விநாயக தாமோதர சாவர்க்கர்.பதினொரு வயதிலேயே சிறுவர்களை திரட்டி விநாயகர் ஊர்வலம் நடத்தியவர். 

மகாராஷ்டிராவில் உள்ள நாசிக்கில் 1883-ம் வருடம் மே 28-ம் தேதி பிறந்த சாவர்க்கரின் முழுப்பெயர் விநாயக தாமோதர சாவர்க்கர்.பதினொரு வயதிலேயே சிறுவர்களை திரட்டி விநாயகர் ஊர்வலம் நடத்தியவர். 

savarkar

காங்கிரசின் தீவிரவாத தலைவர் என அழைக்கப்பட்ட பாலகங்காதர திலகரால் ஈர்க்கப்பட்டு,15 வயதிலேயே ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள துவங்கிவிட்டார்.மேல் படிப்புக்காக லண்டன் அனுப்பப்பட்ட சாவர்க்கர் ,அங்கே இண்டியா ஹவுசில் தன்னுடன் தங்கியிருந்த மாணவர்களை ஆங்கிலேயருக்கு எதிராக போராடத் தூண்டியதாகவும் ,ஆயுதப் பயிற்சி அளித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். 

அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் போராட்டங்களிலேயே கழிந்தது.இன்று ஆட்சியையே பிடித்துவிட்ட இந்துத்வா என்கிற கொள்கையை அறிமுகம் செய்தது இவர்தான்.கவிஞர்,எழுத்தாளரான சாவர்க்கர்,இந்திய விடுதலை போராட்டம் 1857,இந்துத்வா போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

savarkar

மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையடைந்த சாவர்க்கர் இந்துமகா சபையின் தலைவராகி,நாடு முழுவதும் பயணம் செய்து இந்துத்துவ கொள்கையை பரப்புவதில் ஈடுபட்டிருந்தார்.

இன்றைய பிஜேபி,இந்து முன்னணி, இந்து மகாசபா,சிவசேனா போன்ற இயக்கங்களின் ஆதர்ச நாயன் இவர்தான்.அதனால்தான் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்தில் சாவர்க்கர் உருவப்படம் திறக்கப்பட்டதும், அந்தமான் விமான நிலையத்திற்கு அவர் பெயரை சூட்டுவதும் நிகழ்ந்தது.

வாழ்ந்த காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும்,இந்திய வரலாற்றில் சாவர்க்கருக்கும் ஒரு இடம் உண்டு.