சாலை விபத்தில் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம்! எடப்பாடி பழனிசாமி அதிரடி

 

சாலை விபத்தில் இறந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம்! எடப்பாடி பழனிசாமி அதிரடி

சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களுக்கு முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரணத் திட்டத்தின் கீழ் ரூ.1,00,000/- மற்றும் காயங்களுக்கு ரூ.10,000/- முதல் ரூ.50,000/- வரை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரால் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களுக்கு முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரணத் திட்டத்தின் கீழ் ரூ.1,00,000/- மற்றும் காயங்களுக்கு ரூ.10,000/- முதல் ரூ.50,000/- வரை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரால் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் நிதியுதவி பெற விபத்து ஏற்பட்டவுடன் சம்மந்தப்பட்ட காவல்நிலையங்களில் இறப்புச்சான்று/காயச்சான்று, வாரிசுசான்று, ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் ஆகியவற்றினை சமர்ப்பித்து விண்ணப்பப் படிவத்தினை பூா்த்தி செய்து வழங்க வேண்டும்.

Road Accident

இந்த விண்ணப்பமானது வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டு முதுநிலையின் அடிப்படையிலும், காவல்துறையினரின் ஆய்வின் கீழும், வருவாய் கோட்டாட்சியரால் நிவாரண நிதியுதவி வழங்கப்படும். இதுதொடர்பான அறிவிப்பு பதாகைகள், அனைத்து காவல் நிலையங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.