சாலை பாதுகாப்பு நிறைவு விழா: மகனை நினைவுகூர்ந்து வருந்திய செல்லூர் ராஜூ

 

சாலை பாதுகாப்பு நிறைவு விழா: மகனை நினைவுகூர்ந்து வருந்திய செல்லூர் ராஜூ

ரேஸ்கோர்ஸ் சாலையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு நிறைவு விழாவில் கலந்துகொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தன் மகனின் இழப்பு குறித்து வருந்திப் பேசினார்.

மதுரை: ரேஸ்கோர்ஸ் சாலையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு நிறைவு விழாவில் கலந்துகொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தன் மகனின் இழப்பு குறித்து வருந்திப் பேசினார்.

மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு நிறைவு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார். விழாவில், கடந்த 20 ஆண்டுகளாக விபத்து ஏற்படுத்தாமல் அரசு பேருந்து இயக்கிய பேருந்து ஓட்டுநர்கள் 60 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். அதன்பிறகு சாலை பாதுகாப்பு குறித்து அவர், சாலை பாதுகாப்பு மிக அவசியமானது. சாலை விபத்தால் உறவை இழந்தவர்க்கு நானும் ஒரு உதாரணம். என் மகனை இழந்து வேதனையில் தவித்ததை என்னால் மறக்க முடியாது. சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

அமைச்சர் செல்லூர் ராஜூவின் மகன் தமிழ்மணி 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.