சாலை தடுப்பை உடைத்துவிட்டு சாவகாசமாக நடைபோட்ட யானைகள்.. வைரலாகும் வீடியோ

சாலை தடுப்பை உடைத்துவிட்டு சாவகாசமாக நடைபோட்ட யானைகள்.. வைரலாகும் வீடியோ

சமீப காலமாகவே காட்டை விட்டு தனித்தனியாகவோ கூட்டமாகவோ யானைகள் ஊருக்குள் வரும் சம்பவம் அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது. நேற்று கோவையில் உள்ள நரசிம்மநாய்க்கன்பாளையத்தில் யானைக்கூட்டம் ஒன்று சாலையை கடந்த விதம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது! 

elephant

கூட்டமாக வந்த யானைகள் எந்தக் கவலையும் இல்லாமல் சென்டர் மீடியனை உடைத்துக்கொண்டு சாலையைக் கடந்து போகிறது.பொதுமக்கள் அச்சத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க யாரோ ஒருத்தர் அந்தக் காட்சியை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் தட்டிவிட அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

“பன்னாரி அம்மன் கோவிலை அடுத்த காட்டிலிருந்து அந்த யானைகள் வெளியே வந்துள்ளன எனவும் அவை எந்த அசம்பாவிதவும் இழைக்கவில்லை எனவும் உயிர் சேதம் எதுவும் இல்லை எனவும் வனப்பகுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் அந்த யானைகள் தெக்குப்பாளையத்திற்கு சென்று மீண்டும் காட்டுக்குள் செல்கின்றன எனவும், வேடர்களிடமிருந்தும், கடத்தல் செய்பவர்களிடமிருந்தும் யானைகளை காக்க ஏற்பாடுகளும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது”என்று  வனஅதிகாரி தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து பேசும்போது “இந்த யானைகள் அடிக்கடி இவ்வாறு சுற்றி திரிகின்றன, அவை காட்டினிலிருந்து வெளிவராமலும், பயிர்களை சேதப்படுத்தாமலும் இருக்க முன்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் சொல்லியிருக்கிறார்