சாலையோர பழக்கடை அருகே சுண்ணாம்பு வட்டங்களை வரைந்த மமதா பானர்ஜி – வீடியோ உள்ளே

 

சாலையோர பழக்கடை அருகே சுண்ணாம்பு வட்டங்களை வரைந்த மமதா பானர்ஜி – வீடியோ உள்ளே

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சாலையோர பழக்கடை அருகே சுண்ணாம்பால் வட்டங்களை வரைந்தார்.

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சாலையோர பழக்கடை அருகே சுண்ணாம்பால் வட்டங்களை வரைந்தார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்தார். இதையடுத்து அனைத்து மாநில அரசுகளும் மக்கள் வெளியே நடமாடுவதை கட்டுப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி களத்தில் இறங்கி ஒரு முன்னுதாரணமாக செயல்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மக்கள் எந்த தொலைவில் நின்று பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்று கொல்கத்தாவில் சாலையோர பழக்கடை உரிமையாளரிடம் முதல்வர் மமதா பானர்ஜி சுண்ணாம்பு கட்டியால் வட்டம் வரைந்து காண்பித்தார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மமதா பானர்ஜியின் முன்னுதாரண செயலுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.