சாலையோரம் கடை வச்சிருக்கீங்களா? அப்ப உங்களுக்கு கடன் இலவசம் – நிர்மலா சீதாராமன் அதிரடி

 

சாலையோரம் கடை வச்சிருக்கீங்களா? அப்ப உங்களுக்கு கடன் இலவசம் – நிர்மலா சீதாராமன் அதிரடி

கொரோனா பாதிப்பு காரணமாக தொழில்கள், மக்கள் முடங்கிப்போய் உள்ளனர். இதை எதிர்கொள்ள இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 10 சதவிகிதத்தை அதாவது ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் நிவாரண திட்டம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

கொரோனா பாதிப்பு காரணமாக தொழில்கள், மக்கள் முடங்கிப்போய் உள்ளனர். இதை எதிர்கொள்ள இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 10 சதவிகிதத்தை அதாவது ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் நிவாரண திட்டம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதைத் தொடர்ந்து நேற்று (மே13) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல்கட்ட நிவாரண திட்டங்களை அறிவித்தார். அதில், சிறு குறு, நடுத்தர தொழில்துறைக்கு கடன் உதவி உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்தார். மொத்தம் 3.6 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகும் என்று நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

Nirmala sitharaman

இந்நிலையில் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் , “சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்காக சிறப்புத்திட்டம் அமல்படுத்தப்படும். சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்காக ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறப்புக் கடன் திட்டத்தில் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயன்பெறுவார்கள். சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக இம்மாத இறுதிக்குள் சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும். மலிவுவிலை வீடுகளை வாங்குபவர்களுக்கான வட்டி மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான மலிவுவிலை வீடு திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது. மலிவு விலை வீடு திட்டம் நீட்டிக்கப்படுவதால் ரூ.70 ஆயிரம் கோடி புதிய முதலீடுகள் செய்யப்படும்.பழங்குடி மக்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்குவதற்காக ரூ.6000 கோடிக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளாது.” எனக்கூறினார்.