சாலையோரங்களில் குப்பை கொட்டுவதைத் தடுக்க விழுப்புரத்தில் நூதன முயற்சி.. அமைச்சர் பாராட்டு !

 

சாலையோரங்களில் குப்பை கொட்டுவதைத் தடுக்க விழுப்புரத்தில் நூதன முயற்சி.. அமைச்சர் பாராட்டு !

குப்பைத் தொட்டியில் போடாததினால், அதிலிருந்து துர்நாற்றம் வீசி அதன் அருகில் வசிக்கும் மக்களுக்கு நோய் வர வைத்து விடுகிறது.

பெரும்பாலான இடங்களில் மக்கள் ரோட்டிலேயே குப்பையைப் போட்டு விட்டுச் செல்கின்றனர். அதுமட்டுமின்றி, மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து, குப்பைத் தொட்டியில் போடாததினால், அதிலிருந்து துர்நாற்றம் வீசி அதன் அருகில் வசிக்கும் மக்களுக்கு நோய் வர வைத்து விடுகிறது.

ttn

அதனைச் சுத்தம் செய்வதற்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. சாலையோரங்களில் குப்பைக் கொட்டக் கூடாது என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், அதனை மக்கள் கேட்பதாக இல்லை.

ttn

சாலையோரங்களில் குப்பைக் கொட்டுவதைத் தடுக்க கோவை மாவட்டத்தில் நூதன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதாவது குப்பைக் கொட்டும் இடங்களில்  விழுப்புரம் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள், வண்ண கோலமிட்டு குப்பைக் கொட்டுவதைத் தடுத்துள்ளனர். மக்களும் அங்குக் கோலமிட்டிருப்பதால் அங்குக் குப்பை கொட்டவில்லை என்று கூறப்படுகிறது. 

ttn

அது குறித்து அமைச்சர் வேலுமணி அவரது ட்விட்டர் பக்கத்தில், ” கோவை மாநகராட்சியில் தொடங்கி மாநகராட்சிகள், நகராட்சிகள் என்று குப்பைகளால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளைத் தடுக்கும் விதமாகக் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படும் இடங்களில் வண்ண கோலமிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது.அவ்வகையில் இந்த வித்தியாசமான முயற்சியைச் செயல்படுத்திய விழுப்புரம் நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். குப்பை, தொட்டிக்கு அழகு. குப்பையே இல்லாத வீதிகள், சுகாதாரத்திற்கு அழகு!” என்று பதிவிட்டுள்ளார்.