சாலையில் வலியால் துடித்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த காவல் ஆணையருக்கு வெகுமதி வழங்கிய கமிஷனர்!

சாலையில் வலியால் துடித்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த காவல் ஆணையருக்கு வெகுமதி வழங்கிய கமிஷனர்!

சூளைமேடு பகுதியில் அதிகாலை நேரத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து உதவிய பெண் காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவலரை  சென்னை பெருநகர காவல்  ஆணையாளர்  நேரில் அழைத்து  வெகுமதி வழங்கி பாராட்டினார். 

சூளைமேடு பகுதியில் அதிகாலை நேரத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து உதவிய பெண் காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவலரை  சென்னை பெருநகர காவல்  ஆணையாளர்  நேரில் அழைத்து  வெகுமதி வழங்கி பாராட்டினார். 

சூளைமேடு சவுராஷ்ட்ரா நகரைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பானுமதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு நேரத்தில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனை செல்வதற்காக சூளைமேடு நெடுஞ்சாலைக்கு பானுமதி நடந்து வந்துள்ளார். அப்போது வலி அதிகமானதால் சாலையோரம் நிலை தடுமாறி விழுந்துள்ளார். அந்நேரம் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சூளைமேடு குற்றப்பிரிவு ஆய்வாளர் சித்ரா, கர்ப்பிணியை மீட்டு அருகில் இருந்த பெண் துப்புரவு தொழிலாளியுடன் இணைந்து பிரசவம் பார்த்துள்ளார். இதையடுத்து பானுமதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின் தாயும் சேயும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

Police

பணியின் போது சிறப்பாக செயல்பட்டு தக்க சமயத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்க்க உதவிய  சூளைமேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.S.சித்ரா மற்றும் பெண் காவலர் M.பத்மாவதி ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள்  நேரில் அழைத்து  பாராட்டி வெகுமதி வழங்கினார்.