சாலையில் கிடந்த ‘தேசியக்கொடி’.. தூக்கி நிறுத்திய காவலருக்குக் குவியும் பாராட்டுக்கள் !

 

சாலையில் கிடந்த ‘தேசியக்கொடி’..  தூக்கி நிறுத்திய காவலருக்குக் குவியும் பாராட்டுக்கள் !

கடலூர் மாவட்டம் வால்பேட்டை அருகே கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி  இஸ்லாமிய அமைப்புகள் அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதே போலத் தமிழகத்திலும் பல போராட்டங்கள் நடந்தது. கடலூர் மாவட்டம் லால்பேட்டை அருகே கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி  இஸ்லாமிய அமைப்புகள் அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கட்சியினருக்கும் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

ttn

அப்போது, போராட்டத்தில் கலந்து கொண்ட சில பேர் தங்கள் கைகளிலிருந்த தேசியக் கொடியைக் கீழே போட்டு விட்டு அங்கிருந்து சென்றனர். தேசியக் கொடி கீழே கிடைப்பதைக் கண்ட தமிழ்நாடு சிறப்புக் காவல்படையைச் சேர்ந்த காவலர் கார்த்திகேயன், அந்த கொடியை நிமிர்த்தினார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர, அந்த வீடியோ வைரல் ஆனது. 

ttn

அந்த வீடியோவை பார்த்த சென்னை மாநகர காவல் ஆணையரும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிநவ்வும் நேரில் அழைத்து வெகுமதி அளித்து, தங்களது  பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். இது குறித்துப் பேசிய காவலர் கார்த்திகேயன், இந்த சம்பவம் என் வாழ்நாளில் மிக முக்கியமானது. அதே போல, இந்த பாராட்டுக்கள் என்னை ஊக்கப்படுத்துகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.