சாலைக்கு நிலம் தர மறுத்த சகோதரிகள்… கட்டிவைத்து அடித்த ஊராட்சித் தலைவர்!

 

சாலைக்கு நிலம் தர மறுத்த சகோதரிகள்… கட்டிவைத்து அடித்த ஊராட்சித் தலைவர்!

மேற்கு வங்க மாநிலத்தில் சாலை அமைக்க தன்னுடைய நிலத்தைத் தர மறுத்த சகோதரிகள் இருவரை ஊராட்சித் தலைவர் சாலையில் இழுத்துச் சென்று கட்டிவைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் சாலை அமைக்க தன்னுடைய நிலத்தைத் தர மறுத்த சகோதரிகள் இருவரை ஊராட்சித் தலைவர் சாலையில் இழுத்துச் சென்று கட்டிவைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டம் பதாநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமர் சர்க்கார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், அந்த ஊராட்சியின் தலைவராகவும் உள்ளார். பதாநகர் கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தில் சாலை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துவந்தனர். இதனால், அந்த நிலத்துக்கு சொந்தக்காரர்களான ஆசிரியை உள்ளிட்ட இரண்டு சகோதரிகள் 12 அடி நிலத்தை விட்டுக்கொடுத்தனர். இதனால் ஊர் மக்கள் அவர்களுக்கு நன்றி கூறினர். இந்த நிலையில், 12 அடிக்கு பதில், அங்கு 24 அடியில் சாலை அமைக்க ஊராட்சி சார்பில் திட்டமிடப்பட்டது. இதனால், கூடுதலாக 12 அடி நிலத்தைத் தர வேண்டும் என்று ஊராட்சி சார்பில் கேட்கப்பட்டது. இதற்கு சகோதரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

protest-for-west-bengal-teacher

இதனால் கோபமடைந்த அமல் சர்க்கார், அந்த இரண்டு சகோதரிகளையும் அடித்து கயிறு கட்டி சாலையில் இழுத்துச் சென்றுள்ளார். பிறகு அவர்களை கட்டிவைத்து அடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. இதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ஆனால், அவரை கைது செய்ய போலீஸ் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. ஆசிரியை உள்ளிட்ட சகோதரிகளை கட்டிவைத்து அடித்த அமல் சர்க்காரை கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள், எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன.