“சார்…நிலாவுக்கு போகணும், ரெண்டு டிக்கெட் கிடைக்குமா…” விநோத ஆசையால் வில்லங்கத்தில் சிக்கிய கோடீஸ்வரர்!

“சார்…நிலாவுக்கு போகணும், ரெண்டு டிக்கெட் கிடைக்குமா…” விநோத ஆசையால் வில்லங்கத்தில் சிக்கிய கோடீஸ்வரர்!

உலகம் முழுக்கவே வினோதமான பழக்க வழக்கங்கள் உள்ள ஆட்கள் நிறையவே இருக்கிறார்கள்.இதில் சில கிறுக்கர்களும் இருப்பார்கள். இப்போது நாம் பார்க்கப்போகிற மனிதர் எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை செய்தியை முழுசா படிச்சு முடிச்சிட்டு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்… அதுக்கான முழு உரிமையும் இப்பவே கொடுக்கிறேன்.

millionarie

பாகாமாஸ் நாட்டை சேர்ந்த கோடீஸ்வரரான ஹரால்டு மெக் பைக்.காசுக்கு பஞ்சமே இல்லாத ஆள்.இவருக்கு முழு நேர வேலையே உலகம் முழுக்க ரவுண்ண்டடிச்சு கொண்டாட்டமா வாழ்றதுதான்.வாழ்வாங்கு வாழ்றான்ன்னு நம்மூர்ல சொல்லுவாய்ங்கல்ல அந்தவகை.வடதுருவத்துல ஆரம்பிச்சு  தென்துருவம் வரை போகாத நாடு கிடையாது.பார்க்காத இடம் கிடையாது! இந்த இடத்தில் நீங்கள் தேவையில்லாத கற்பனை பண்ணிக்க வேண்டாம்! இது பாலிடிக்ஸ் நியூஸ் கிடையாது.

moon

எல்லாத்தையும் பார்த்தாச்சு…சரி,ஒரு டிக்கெட்டைப் போட்டு நிலாவுக்கு போயிட்டு வந்திட்டம்னா,வாழ்ந்த வாழ்க்கை நிறைவா இருக்குமேன்னு ஆசைப்பட்டிருக்கார்.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள விண்வெளி நிறுவனத்துக்கு ஒரு போனைப் போட்டு தன்னோட ஆசையைச் சொல்லியிருக்கார். ‘அட… இதென்ன பிரமாதம் 1045 கோடி ரூபாய் செலவாகும் பரவாயில்லையா!?’ என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் கேட்டதும் ,நம்மாளு உற்சாகமாகி ஒரு டிக்கெட்டை போடுங்க என்று முன் பணமாக 48 கோடி ரூபாயைக் கட்டியிருக்கார்.
பணத்தைக் கட்டின நாளில் இருந்து நிலவுக்கு போற கனவில் மிதந்து கொண்டிருந்த ஹெரால்ட்டுக்கு, அஞ்சு வருஷமாகியும் அழைப்பு வரவில்லை! அப்பறம் வேறென்ன பண்றது..,கொடுத்த பணத்தையாவது வாங்கிக்கொடுங்க சார்ன்னு கோர்ட் படியேறியிக்கிறார் மனுசன்.