சார்லி சாப்ளின் 2: படத்தை விமர்சனம் செய்தவர்கள் மீது போலீஸில் புகார் 

 

சார்லி சாப்ளின் 2: படத்தை விமர்சனம் செய்தவர்கள் மீது போலீஸில் புகார் 

சார்லி சாப்ளின் 2 படத்தை விமர்சனம் செய்தவர்கள் மீது அப்படத்தை இயக்கிய ஷக்தி சிதம்பரம் போலீஸில் புகார் அளித்துள்ளார்

சென்னை: சார்லி சாப்ளின் 2 படத்தை விமர்சனம் செய்தவர்கள் மீது அப்படத்தை இயக்கிய ஷக்தி சிதம்பரம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

பிரபுதேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது சார்லி சாப்ளின் 2. கடந்த 2002ம் ஆண்டு வெளியான சார்லி சாப்ளின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார்.

sakthi chidambaram

இந்நிலையில், இத்திரைப்படம் ரசிகர்களை தியேட்டரை விட்டு வெளியே ஒட வைத்திருக்கும் நிலையில் அதன் உண்மையான விமர்சனத்தைப் பொறுக்க முடியாமல் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் விமர்சனம் செய்தவர்கள் மீது போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால் படத்தில், கதை என்று எதுவுமில்லை பிரபுதேவா, நிக்கி, இசையமைப்பாளர் அம்பரீஷ் ஆகியோரைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஓசியில் எடுத்து விட்டு ரசிகர்களிடம் இருநூற்றமைபது ரூபாய்க்கு டிக்கெட் கேட்டால் எப்படி பொறுத்துக் கொள்வார்கள். 

இத்தனைக்கும் ஷகதி சிதம்பரம்  வசூல் ரீதியாக வெற்றி பெற்ற பல படங்களை எடுத்து சக்ஸஸ் கொடுத்தவர் அவரிடமிருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்காததால் விமர்சகர்கள் கொதித்து விட்டார்கள். இதை காவல்துறையில் புகார் கொடுக்கும் அளவுக்கு போயிருப்பது கொஞ்சம் அதிகம்தான் என்று பலரும் கூறிவருகின்றனர்.