சார்லின் சாப்ளின் – சிரிப்பா? அரிப்பா ? விமர்சனம்

 

சார்லின் சாப்ளின் – சிரிப்பா? அரிப்பா ? விமர்சனம்

திருமண தகவல் மையம் நடத்தி வரும் பிரபுதேவா நூறு திருமணங்களுக்கும் மேல் நடத்தி வைக்கிறார்.

திருமண தகவல் மையம் நடத்தி வரும் பிரபுதேவா நூறு திருமணங்களுக்கும் மேல் நடத்தி வைக்கிறார். ஆனால் அவருக்கு ஒரு திருமணம் நடத்தி வைக்க ஆசைப்படுகிறார் அப்பாவான டி.சிவா. இந்நிலையில் நிக்கி கல்ராணியை பார்க்கும் பிரபுதேவா அவர் மீது காதல் கொள்கிறார். தனது நண்பர்களுடன் காதலியை சம்மதிக்க வைக்க நினைக்கிறார். ஆனால் எதிர்பாராமல் நிக்கி ஒருவருக்கு நெருக்கமான முத்தம் கொடுக்கும் காட்சியை .தனது துபாய் நண்பன் செல் போனில் பார்க்கிறார். இதனால் அவர்கள் ஆலோசனையில்  நிக்கியையும், அவர்கள் குடும்பத்தையும்  கண்டபடி திட்டி ஒரு வீடியோவை அவருக்கே அனுப்பி வைக்கிறார். அதே நேரத்தில் திருப்பதியில் இருக்கும் நிக்கி போனில் அந்தக் காட்சியில் பார்க்கிறார் இவர்களது திருமணம் எப்படி நடக்கிறது என்பதை கலகலப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஷக்திசிதம்பரம்.

charlie chaplin 2

பிரபுதேவா அதே இளமையுடனும், அதே காமெடி சென்சுடனும் நடித்திருக்கிறார். வழக்கம்போல் நடனத்தில் அசத்தியிருக்கிறார். ஆனால் கதையில் அடர்த்தி இல்லாததால் அவருக்கு நடிக்கவோ, நகைச்சுவையூட்டவோ முடியவில்லை. பல காட்சியில் வெறுமனே நின்றுகொண்டிருக்கிறார்.

நிக்கி கல்ராணி எப்போதும் போல வந்து போகிறார். பாடலில் மட்டும் நன்றாக ஆடுகிறார்.. டி.சிவா. பிரபு, ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

charlie chaplin

ஷக்தி சிதம்பரத்தின் திரைக்கதையும், கற்பனையும் வலுவாக இல்லாததால் பல இடங்களில் சிரிப்புக்கு பதில் அரிப்புதான் வருகிறது. பல இடங்களில், பல படங்களில் பார்த்த அதே காட்சிகள் வந்து போகின்றன.

charlie chaplin 2

பாடல் காட்சிகள் மட்டும் பார்த்து ரசிக்க முடிகிறது. அதுவும் அந்த சிவத்தபுள்ள பாட்டு அமர்க்களம். இசை அம்பரீஷ் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

சார்லி சாப்ளின் 2 – சிரிப்பல்ல அரிப்பு