சாரி மோடிஜி, சிம்லா ஸ்மார்ட் சிட்டி ரெடியாகலை, ரோபோ சிட்டி பொம்மைதான் ரெடியாச்சு!

 

சாரி மோடிஜி, சிம்லா ஸ்மார்ட் சிட்டி ரெடியாகலை, ரோபோ சிட்டி பொம்மைதான் ரெடியாச்சு!

ஐந்தாண்டுகள் முடிவில் “யோவ் அமைச்சரே, எங்கய்யா இங்க இருக்க வேண்டிய சிம்லா ஸ்மார்ட் சிட்டி?” என்று மோடி கேட்டால், “சாரி சார் ஸ்மார்ட் சிட்டி ரெடியாகலை, ரோபோ சிட்டி பொம்மைதான் ரெடி பண்ண முடிஞ்சது” என அமைச்சர் ரஜினி பொம்மையை எடுத்துகாட்டாதவரைக்கும் உத்தமம்!

நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்க வேண்டும் என்ற முந்தைய பாஜக அரசின் திட்டத்தின்கீழ், இமாச்சல பிரதேசத்தின் தலைநகரான சிம்லா கடந்த 2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அடுத்த ஐந்தாண்டுகளுக்குள், அதாவது 2022ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் சிட்டிக்கான அனைத்து வேலைகளும் முடிந்துவிடவேண்டும் என்ற குறிக்கோளுடன் துவங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு, 2,906 கோடி ரூபாய் அளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்படவிருந்தன. இதுவரை 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதில், கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய்கள் சம்பளமாக செலவிடப்பட்டுள்ளன. மொத்தம் 23 துறைகளின்கீழ் துவங்கப்படவேண்டிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு, இதுவரை 12 துறைகளுக்கு மட்டுமே ஆரம்ப கட்டப்பணிகள் துவங்கியுள்ளன.

Shimla smart city

சிம்லா ஸ்மார்ட் சிட்டி கார்ப்பரேஷன் நிறுவனமே கடந்த ஆண்டுதான் துவங்கப்பட்டது.  மொத்தம் 53 திட்டங்கள் முன்வைக்கப்பட்டப்போதும், பெரும்பாலான திட்டங்களுக்கான நிபுணர் குழுவே இன்னும் அமைக்கப்படவில்லை. சுற்றுலாவை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதற்காக போக்குவரத்தை எளிதுபடுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிகிறது. ஆனால், ஐந்தாண்டுகளுக்குள் பணிகள் முடிக்கப்படவேண்டிய நிலையில், ஐந்தாண்டுகளுக்குள் பணிகள் துவங்கப்பட்டாலே ஆச்சர்யம் என்கிற அளவில்தான்  ஸ்மார்ட் சிட்டி வேலைகள் நகர்கின்றன. ஐந்தாண்டுகள் முடிவில் “யோவ் அமைச்சரே, எங்கய்யா இங்க இருக்க வேண்டிய சிம்லா ஸ்மார்ட் சிட்டி?” என்று மோடி கேட்டால், “சாரி மோடிஜி ஸ்மார்ட் சிட்டி ரெடியாகலை, ரோபோ சிட்டி பொம்மைதான் ரெடி பண்ண முடிஞ்சது” என அமைச்சர் ரஜினி பொம்மையை எடுத்துகாட்டாதவரைக்கும் உத்தமம்!