சாராயம் வித்தும் சம்பாதிக்கலாம், இளநி வித்தும் சம்பாதிக்கலாம்; பணத்துக்காக சாராயம் விக்க மாட்டேன்! – இயக்குனர் சீனு ராமசாமி

 

சாராயம் வித்தும் சம்பாதிக்கலாம், இளநி வித்தும் சம்பாதிக்கலாம்; பணத்துக்காக சாராயம் விக்க மாட்டேன்! – இயக்குனர் சீனு ராமசாமி

இளநி வித்து வர்ற காசு கம்மியா இருந்தாலும் பரவால்ல. அது, குடிக்குறவன் உடம்ப கெடுத்துடாது

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இந்த மாதம் வெளிவரவிருக்கிற படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி ஸ்டாலின்,தமன்னா ஜோடி நடித்துள்ள இந்தப்படம் எப்போதும் போல் மதுரை மண் சார்ந்த கதைதான். எளிய மனிதர்களின் வாழ்க்கையை ரொம்ப நேர்மையாக பதிவு செய்திருப்பதாக, படம் பார்த்த அனைவரும் சொல்கிறார்கள்.

அவரிடம் நீண்ட காலமாக உதவியாளராக இருப்பவர் ஜெயச்சந்திரா ஹாஸ்மி. படம் பார்த்துவிட்டு சீனு ராமசாமி பற்றி இப்படிச் சொல்கிறார்-

‘படம் எடுத்து வீடு வாங்குறோமோ கார் வாங்குறோமாலாம் முக்கியமில்லடா…இங்க சம்பாதிக்க எத்தனையோ வழி இருக்கு. சாராயம் வித்தும் சம்பாதிக்கலாம்; இளநி வித்தும் சம்பாதிக்கலாம். பணம் அதிகமாம வருதுன்னு எக்காரணத்த கொண்டும் சாராயம் விக்கமாட்டேன்.

இளநி வித்து வர்ற காசு கம்மியா இருந்தாலும் பரவால்ல. அது, குடிக்குறவன் உடம்ப கெடுத்துடாது. நான் இளநியே வித்துக்குறேன்’என்று எங்க இயக்குனர் எப்பவும் சொல்ற விஷயம் இது. அவரோட ஒவ்வொரு படம் பாத்துட்டு வெளிய வரும்போது என் மனசுல தோனுற விஷயமும் இதுதான்!

kanne kalaimaane

‘கண்ணே கலைமானே’ படம் பாத்துட்டு வெளிய வரும்போதும் இதேதான் தோனுச்சு. ஒரு எளிமையான மண் சார்ந்த கதை, அன்பான மனிதர்கள், சூழ்நிலைகளே வில்லன்கள் என தனக்கேயுரிய வாழ்வியலை இந்த படத்திலும் தொடர்ந்திருக்கிறார் இயக்குனர்.

எளிமையான மனிதர்களின் பேரன்பு – இதுதான் இயக்குனர் சீனு ராமசாமியின் அத்தனை திரைப்படங்களிலும் அடிநாதமாக இருக்கும். இதிலும் அதுவே!! கண்ணே கலைமானே இன்னோர் சுவையான இளநீர்!! 22 ஆம் தேதி திரைக்கு வருகிறது. பார்த்துவிட்டு சொல்லுங்க பாஸ்’ என்று படம் பற்றியும் சீனு பற்றியும் சிலாகிக்கிறார்.

வெயில் வேற வெளுக்க ஆரம்பிச்சிருச்சு…இளநி யாவாரம் சூடு பிடிக்கட்டும் ப்ரோ.