சாய்ந்த நிலையில் விக்ரம் லேண்டர் : தனது இலக்கை அடையுமா இஸ்ரோ?

 

சாய்ந்த நிலையில் விக்ரம் லேண்டர் : தனது இலக்கை அடையுமா இஸ்ரோ?

திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்ட விக்ரம் லேண்டர் தற்போது உடையாமல் சாய்ந்த நிலையில் இருப்பதாக இஸ்ரோ  தகவல் தெரிவித்துள்ளது. 

திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்ட விக்ரம் லேண்டர் தற்போது உடையாமல் சாய்ந்த நிலையில் இருப்பதாக இஸ்ரோ  தகவல் தெரிவித்துள்ளது. 

சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட 48 நாட்களில் அதில் இருந்த விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கும் என எதிர் பார்க்கப்பட்டது. செப்டம்பர் 7 ஆம் தேதி அன்று காலை 1 முதல் 2 மணியளவில் தரை இறங்கும் என அறிவிக்கப்பட்டது. மணிக்கு 212 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த விக்ரம் லேண்டர் நிலவை நெருங்குவதற்கு 2.1 கிலோ மீட்டர் முன்னதாக லேண்டருடனான தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து, விக்ரம் லேண்டர் உடையாமல் தரை இறங்கியதா? என்ன நிகழ்ந்தது என பல குழப்பங்களுடன் இஸ்ரோ இருந்தது. 

இந்நிலையில் விக்ரம் லேண்டர்  நிலவின் தென் துருவத்தில் இறங்கியிருப்பதை நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர்கள்  படம் பிடித்து காட்டின. அதை தொடர்ந்து , இன்று விக்ரம் லேண்டருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், சற்று சாய்ந்த நிலையில் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கியுள்ளது எனவும் இஸ்ரோ தலைவர் திரு. சிவன் அவர்கள் தெரிவித்தார். மேலும், விக்ரம் லேண்டருடன் தொடர்பை உண்டாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் சிவன் தெரிவித்தார்.