சாம்சங் கேலக்ஸி நோட் 9 மாடல் ஸ்மார்ட்போன்களின் லிமிட்டெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

 

சாம்சங் கேலக்ஸி நோட் 9 மாடல் ஸ்மார்ட்போன்களின் லிமிட்டெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் கேலக்ஸி நோட் 9 மாடல் ஸ்மார்ட்போன்களின் லிமிட்டெட் எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லி: சாம்சங் கேலக்ஸி நோட் 9 மாடல் ஸ்மார்ட்போன்களின் லிமிட்டெட் எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு கேலக்ஸி நோட் 9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்நிலையில், தற்போது அந்த மாடல்களின் லிமிட்டெட் எடிஷனை அந்நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆல்பைன் வைட் நிறத்திலும், கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் ரேடியன்ட் போலாரிஸ் புளு நிறத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் புது ஆல்பைன் வைட் நிறம் தவிர ஓசன் புளு, மிட்நைட் பிளாக், மெட்டாலிக் காப்பர் மற்றும் லாவென்டர் பர்ப்பிள் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

அதேபோல கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் ரேடியன்ட் போலாரிஸ் புளு நிறம் தவிர மிட்நைட் பிளாக், கோரல் புளு, லிலாக் பர்ப்பிள், சன்ரைஸ் கோல்டு, பர்கன்டி ரெட் உள்ளிட்ட நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஆல்பைன் வைட் எடிஷன் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை இந்தியாவில் ரூ.67,900 என்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் போலாரிஸ் புளு நிற எடிஷன் விலை ரூ.64,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல்களும் சாம்சங் ஆன்லைன் வலைதளம் மற்றும் குறிப்பிட்ட சில ஆன்லைன் இணையதளங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன்கள் ஆஃப்லைன் தளங்களில் டிசம்பர் 10-ஆம் தேதி முதல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல்களை வாங்குவோர் குறிப்பிட்ட சில வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது அதிகபட்சம் ரூ.6000 வரை கேஷ்பேக் பெற முடியும். மேலும், பழைய ஸ்மார்ட்போன் மாடல்களை எக்சேஞ்ச் செய்யும் போது அதிகபட்சம் ரூ.9,000 வரை தள்ளுபடி பெற முடியும்.