சாம்சங் கேலக்ஸி ஜெ4 பிரைம் மற்றும் கேலக்ஸி ஜெ6 பிரைம் ஸ்மார்ட்போன்களின் தகவல்கள் ‘லீக்’ !

 

சாம்சங் கேலக்ஸி ஜெ4 பிரைம் மற்றும் கேலக்ஸி ஜெ6 பிரைம் ஸ்மார்ட்போன்களின் தகவல்கள் ‘லீக்’ !

டெல்லி: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ4 பிரைம் மற்றும் கேலக்ஸி ஜெ6 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல்கள் தொடர்பாக அந்நிறுவன வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜெ4 பிரைம் மற்றும் கேலக்ஸி ஜெ6 பிரைம் ஸ்மார்ட்போன்கள் தொடர்பான தகவல்கள் அந்நிறுவனத்தின் வியட்நாம் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் SM-J415F/DS மற்றும் SM-J610F/DS என்ற மாடல் நம்பர்களை கொண்டுள்ளதாக தெரிகிறது.

பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு ஸ்மார்ட்போன் மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், குவால்காம் பிராசஸர்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன்களுக்கு முந்தைய வெர்ஷனான சாம்சங் கேலக்ஸி ஜெ4 மாடலில் 5.5 இன்ச் ஹெச்.டி. டிஸ்பிளே, குவாட்-கோர் சாம்சங் எக்சைனோஸ் 7570 சிப்செட், 2 ஜிபி / 3 ஜிபி ரேம், 16 ஜிபி / 32 ஜிபி மெமரி, புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல கேலக்ஸி ஜெ6 மாடலில் 5.6 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, எக்சைனோஸ் 7870 பிராசஸர், 3 ஜிபி / 4 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஆதலால், கேலக்ஸி ஜெ4 மற்றும் கேலக்ஸி ஜெ6 மாடல்களின் அப்டேட் வெர்ஷனாக கேலக்ஸி ஜெ4 பிரைம் மற்றும்  கேலக்ஸி ஜெ6 பிரைம் ஸ்மார்ட்போன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.