சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்

 

சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்

சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி: சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு தலைமுறைகள் பழைய மாடலாக இருப்பினும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்கள் இடையே பிரபலமான மாடல்களாக உள்ளன. பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ஓர் நற்செய்தியாக தற்போது இவ்விரு மாடல்களும் அதிக அளவில் சலுகை விலையில் கிடைக்கின்றன. இந்த நிலையில், பீட்டா புரோகிராம் பயன்படுத்தும் பயனர்களின் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வாடிக்கையாளர்களை இன்னும் அதிக அளவில் ஈர்ப்பதாக இருக்கும்.

s9

இந்தியாவில் ஏற்கனவே இந்த அப்டேட் வழங்க தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற நாட்டை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கும் கூடிய விரைவில் பீட்டா சோதனையில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் (ஜனவரி, 2020) வழங்கப்பட்ட செக்யூரிட்டி அப்டேட்டின் மூலம் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய அளவில் சாம்சங் வாடிக்கையாளர்களை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் சென்றடைந்துள்ளது.