சாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியாகும் அதே தேதியில் போட்டியாக களமிறங்கும் சியோமி எம்.ஐ 9 ஸ்மார்ட்போன் !

 

சாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியாகும் அதே தேதியில் போட்டியாக களமிறங்கும் சியோமி எம்.ஐ 9 ஸ்மார்ட்போன் !

சாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியாகும் அதே தேதியில் சியோமி எம்.ஐ 9 ஸ்மார்ட்போன் போட்டியாக களமிறங்குகிறது.

பெய்ஜிங்: சாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியாகும் அதே தேதியில் சியோமி எம்.ஐ 9 ஸ்மார்ட்போன் போட்டியாக களமிறங்குகிறது.

அமெரிக்காவில் பிப்.20-ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்போது அந்த ஸ்மார்ட்போனுக்கு போட்டி அளிக்கும் வகையில் அதே தேதியில் சீனாவில் எம்.ஐ 9 ஸ்மார்ட்போனை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பேட்டில் ஏஞ்சல்என்ற செல்லப் பெயருடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் எம்.ஐ நிறுவனம் இதுவரை தயாரித்த ஸ்மார்ட்போன்களிலே மிகவும் சிறந்த தோற்றத்தை கொண்டிருக்கிறது.

எம்.ஐ 9 ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களாக ஸ்னாப்டிராகன் 855 பிராஸசர், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், 6.4 இஞ்ச் டிஸ்பிளே, 3500 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகியவை உள்ளன. கருப்பு, நீலம், வெள்ளை மற்றும் தங்க நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டுள்ள மாடல்களாக இவை வெளியாக உள்ளது.