சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய டீசர்கள் வெளியானது

 

சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய டீசர்கள் வெளியானது

சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லி: சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பல்வேறு வதந்திகளுக்கு பிறகு சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜன.28-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல்களில் சக்தி வாய்ந்த பிராசஸர், டிஸ்பிளே, கேமராக்கள், பேட்டரி ஆகியவை இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அமேசான் மற்றும் சாம்சங் ஷோரூம்களில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. கேலக்ஸி எம் 10, கேலக்ஸி எம் 20, கேலக்ஸி எம் 30 ஆகிய புதிய மாடல்கள் இந்த சீரிஸில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்ஃபினிட்டி யு ரக டிஸ்ப்ளே மற்றும் மெல்லிய பெசல்கள் இந்த சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

மேலும் இன்ஃபினிட்டி யு ரக டிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா, ஸ்மார்ட்போனின் மேல்புறம் இயர்பீஸ் வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனின் ஓரங்கள் வளைந்தவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஸ்மார்ட்போன்களின் பக்கவாட்டில் பவர் பட்டன், வால்யூம் ராக்கர் உள்ளிட்டவையும், பின்புறம் விரல்ரேகை சென்சார் மற்றும் டூயல் பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் ஆகியவையும் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் அமேசான் இந்தியா இணையதளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.