சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் ஆனது

 

சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் ஆனது

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது சாம்சங் கேலக்ஸி எம்10 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்20 ஆகிய புதிய இரண்டு ஸ்மார்ட்போன்ககள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்விரு ஸ்மார்ட்போன்களிலும் வைட்வைன் எல்1 சான்று பெற்றுள்ளன. எனவே ஹெச்.டி வீடியோக்களை சிரமம் இல்லாமல் சீராக ஸ்டிரீம் செய்ய முடியும். மேலும் ஓசன் புளு மற்றும் சார்கோல் பிளாக் என இருவிதமான நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் சாம்சங் ஷோரூம்களில் இவை பிப்.5-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வெளியாகின்றன.

சாம்சங் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, எக்சைனோஸ் 7870 14 என்.எம் பிராசஸர், 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி மாடல், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி மாடல், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், டூயல் சிம் ஸ்லாட், 13 எம்.பி + 5 எம்.பி இரட்டை பிரைமரி கேமரா, எல்.இ.டி ஃபிளாஷ், 5 எம்.பி செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக் வசதி, 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், எஃப்.எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், 3430 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

சாம்சங் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, எக்சைனோஸ் 7904 14 என்.எம் பிராசஸர், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி மாடல், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி மாடல், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், டூயல் சிம் ஸ்லாட், 13 எம்.பி + 5 எம்.பி இரட்டை பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 8 எம்.பி செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி, 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், எஃப்.எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.7,990 என்றும், 3 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.8,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல சாம்சங் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.10,990 என்றும், 4 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.12,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.