சாம்சங் கேலக்சி நோட் 10 லைட் இந்தியாவில் நாளை (ஜன.21) வெளியாகிறது!

 

சாம்சங் கேலக்சி நோட் 10 லைட் இந்தியாவில் நாளை (ஜன.21) வெளியாகிறது!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்சி நோட் 10 லைட் இந்தியாவில் நாளை (ஜன.21) வெளியாகிறது!

டெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்சி நோட் 10 லைட் இந்தியாவில் நாளை (ஜன.21) வெளியாகிறது!

இந்தியாவில் சாம்சங் கேலக்சி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் நாளை (ஜன.21) வெளியாகிறது. இதன் முக்கிய சிறப்பம்சமாக பார்க்கப்படுவது என்னவெனில், பேனா கொண்டு நோட்டில் எழுதுவது போன்ற வசதியாகும். இதற்கென்று எஸ் பென் என்ற பேனா ஒன்று வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இதைக் கொண்டு நேரடியாக கேலக்சி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் திரையில் எழுத முடியும். அத்துடன் இதை காப்பி, பேஸ்ட், ஷேர் செய்ய முடியும் என்பது கவனிக்கத்தக்கது. இதன் 6 ஜிபி மாடல் விலை தோராயமாக சுமார் ரூ.39,900 என நிர்ணயம் செய்யப்படலாம் சென்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சாம்சங் கேலக்சி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஓ சூப்பர் அல்மோட் டிஸ்பிளே, 4500 எம்.ஏ.எச் பேட்டரி, இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார், 12 மெகா பிக்சல் ரியர் கேமரா, 32 மெகா பிக்சல் செல்பி கேமரா, 128 ஜிபி மெமரி ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பிடிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.