சாமி சிலை அருகில் சிலுவையா? நெட்டிசன் கேள்விக்குத் தக்க பதிலடி கொடுத்த மாதவன்

 

சாமி சிலை அருகில் சிலுவையா? நெட்டிசன் கேள்விக்குத் தக்க பதிலடி கொடுத்த மாதவன்

ரக்ஷா பந்தன், சுதந்திர தினம், ஆணி அவிட்டம் ஆகியவைக்கு சேர்ந்து நேற்று வாழ்த்து தெரிவித்து மாதவன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

ரக்ஷா பந்தன், சுதந்திர தினம், ஆணி அவிட்டம் ஆகியவைக்கு சேர்ந்து நேற்று வாழ்த்து தெரிவித்து மாதவன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் மாதவன், அவர் அப்பா, மகன் வேதாந்த் ஆகியோர் புது பூணூல் போட்டு கொண்டு அமர்ந்துள்ளனர். 

அந்த புகைப்படத்தின் பின்னல் இருக்கும் பூஜை அறையில் சாமி சிலைக்கு அருகே சிலுவை ஒன்று உள்ளது. அதை பார்த்தவர்கள் நெட்டிசன் ஒருவர், ‘தேவாலயங்களில் இந்து கடவுள்களைப் பார்த்தது உண்டா? என்று மாதவனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

அவரின் கேள்விக்குத் தக்க பதிலடி கொடுத்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘உங்களைப் போன்ற ஆட்களிடம் இருந்து நான் மரியாதையை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன். அங்கு உள்ள பொற்கோவில் படத்தை பார்த்துவிட்டு, சீக்கியராகிவிட்டீர்களா என்று கேட்காதது வியப்பாக உள்ளது. தர்காக்களில் இருந்து ஆசி பெற்றுள்ளேன். உலகில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலிருந்தும் ஆசி பெற்றுள்ளேன். அதில் சிலது எனக்கு பரிசாக வந்தது, சிலது வாங்கியவை. என் வீட்டில் அனைத்து மதங்களும் ஏற்கப்பட்டுள்ளது. என் அடையாளத்தைப் பெருமையுடன் தக்க வைக்க வேண்டும். அதே சமயம் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துத் தான் வளர்த்துள்ளனர். 

எம்மதமும் சம்மதம். என் மகனும் இதையே பின்பற்றுவார் என்று நம்புகிறேன். கோவில் இல்லாத இடங்களில் தர்கா, குருத்வாரா, தேவாலயத்தில் பிரார்த்தனை செய்துள்ளேன். நான் இந்து என்பது தெரிந்து அவர்கள் மிகுந்த அன்பும், மரியாதையும் செலுத்தினார்கள். அதற்கு நான் பதிலுக்கு அன்பு செலுத்த வேண்டாமா? என்று கூறியுள்ளார்.