சாமி சிலைகளை கடத்துறதுல என்னா ஒரு சமய நல்லிணக்கம் பாருங்க!

 

சாமி சிலைகளை கடத்துறதுல என்னா ஒரு சமய நல்லிணக்கம் பாருங்க!

லுக்-அவுட் நோட்டீஸுக்கான அவகாசம் முடிந்திருக்கும், மூன்றாண்டுகளுக்குப் பிறகு நோட்டீஸை நீட்டித்திருக்க மாட்டார்கள் என்ற (அவ)நம்பிக்கையில் துபாயிலிருந்து சென்னைக்கு விமானம் ஏறினார் மரிய தெரசா. வந்திறங்கியதுமே, ’வாம்மா மின்னலு’ என அவரை வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டுபோய் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டனர்.

தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்குச் சொந்தமான பழங்கால சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்கப்பட்ட வழக்கில் 2016ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த தீனதயாளனும், புதுச்சேரியைச் சேர்ந்த அவரது தொழில்முறை கூட்டாளியான புஷ்பராஜனும் கைது செய்யப்பட்டனர். புஷ்பராஜன் பங்கான 14 சிலைகளில், 11 சிலைகள் அவருடைய தொழில்முறை கூட்டாளியான மரிய தெரசா என்பவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன. இந்த மரிய தெரசாவும் அவருடைய கணவர் விஜய்யும் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் என்பதால், 3 சிலைகளோடு 2016ஆம் ஆண்டே பிரான்ஸுக்கு எஸ்கேப். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய மரிய தெரசா எப்போது இந்தியா திரும்பினாலும் கைதுசெய்யும்படியான லுக்-அவுட் நோட்டீஸ் விமான நிலையங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

Stolen idols

லுக்-அவுட் நோட்டீஸுக்கான அவகாசம் முடிந்திருக்கும், மூன்றாண்டுகளுக்குப் பிறகு நோட்டீஸை நீட்டித்திருக்க மாட்டார்கள் என்ற (அவ)நம்பிக்கையில் துபாயிலிருந்து சென்னைக்கு விமானம் ஏறினார் மரிய தெரசா. வந்திறங்கியதுமே, ’வாம்மா மின்னலு’ என அவரை வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டுபோய் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டனர். இதுவரை சிலைகடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெரும்புள்ளிகளின் பெயர்களைப் பாருங்கள், தீனதயாளன், புஷ்பராஜ், மரிய தெரசா, மற்றும் டி.எஸ்.பி. காதர் பாட்சா. இதுக்குப் பேர்தான் சமய நல்லிணக்கம் என்றால் அது மிகையாகாது!