சாமியார் பேச்சை கேட்டு காட்டுக்குள் போன வங்கி ஊழியர்: சடலமாக மீட்கப்பட்ட சோகம்!

 

சாமியார் பேச்சை கேட்டு காட்டுக்குள் போன வங்கி ஊழியர்: சடலமாக மீட்கப்பட்ட சோகம்!

புதையலைத் தேடி  காட்டிற்குள் சென்ற வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்: புதையலைத் தேடி  காட்டிற்குள் சென்ற வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கனரா வங்கியில் காசாளராக வேலை புரிந்து வந்தவர்  சிவக்குமார். இவருக்குச் சாமியார் ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது. அந்த சாமியார் அவரிடம் காட்டுப்பகுதியில் மன்னர் காலத்துப் புதையல் இருப்பதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய  சிவகுமாரும்  அவரது நண்பரான பட்நாயக்கும்,  தங்களது குடும்பத்தினரிடம் சுற்றுலா செல்வதாகக் கூறிவிட்டு சாமியாருடன் கடந்த 12-ந்தேதி காட்டுக்குள் சென்றனர். 

forest

இதையடுத்து தொடர்ந்து இரண்டு நாட்கள் நடந்து அடர்ந்த காட்டுப்பகுதி வரை சென்ற இவர்களுக்கு எந்த புதையலும்  கிடைக்கவில்லை. உணவு, தண்ணீர் இல்லாமல் சோர்ந்து போன இவர்கள் அதைத் தேடித் தனித் தனியாகப் பிரிந்து சென்றனர். இதில்  கிருஷ்ணாநாயக் ஒரு கிராமத்தை அடைந்துள்ளார். இனியும் உண்மையை மறைக்கக் கூடாது என்று எண்ணி குடும்பத்தினருக்கு போன் செய்து நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். சிவகுமாரை தேடி காட்டிற்குள் சென்ற காவல் துறையினர், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரை சடலமாக மீட்டனர். 

murder

காட்டில் நிலவிய கடுமையான வெயில் காரணமாகவும், உணவு மற்றும் தண்ணீர் இல்லாமலும் சிவகுமார் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. புதையல் ஆசை காட்டி சிவகுமார் மற்றும் அவரின் நண்பரையும் அழைத்துச் சென்ற சாமியாரையும்  காணாததால், போலீசார் அவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.