சாமியார் கூறியதால் மகனை ஜீவசமாதியாக்கிய பெற்றோர்: சிறுவன் உயிருடன் இருந்ததாக பொதுமக்கள் புகார்!

 

சாமியார் கூறியதால்  மகனை ஜீவசமாதியாக்கிய பெற்றோர்: சிறுவன் உயிருடன் இருந்ததாக பொதுமக்கள் புகார்!

தீவிர சிவபக்தர்களான தனநாராயணன் பொதுத்தேர்வில் 465 பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட தனநாராயணன் தொடர்ந்து படிக்க விருப்பமின்றி

ஆரணி: கிணற்றில் விழுந்து இறந்த மகன் ஜல சமாதியாகி விட்டதாக கூறி பெற்றோர் அவனது உடலை சொந்த நிலத்தில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணியை அடுத்த ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் ஹரிகிருஷ்ணனின் 16 வயது மகன் தனநாராயணன் 10 ஆம் வகுப்பு படித்துள்ளான். தீவிர சிவபக்தர்களான தனநாராயணன் பொதுத்தேர்வில் 465 பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட தனநாராயணன் தொடர்ந்து படிக்க விருப்பமின்றி, பழனி என்பவரை ஆஸ்தான குருவாக ஏற்றுக்கொண்டு ஆன்மீகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே இமயமலை சென்று தியானம் மேற்கொள்ள தனநாராயணன்  அனுமதி கேட்க அதற்கு அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். 

shivan

இதையடுத்து தான் ஜல சமாதி அடையப் போவதாக பெற்றோரிடம் கூறிய தனநாராயணன்  கடந்த மாதம் 24-ம் தேதி, வீட்டிற்கு அருகே உள்ள விவசாய கிணற்றில் தனநாராயணன் விழுந்துள்ளார். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், கிணற்றிலிருந்து தனநாராயணை சடலமாக மீட்டனர். இதையடுத்து, தனநாராயணன் ஜலசமாதி அடைந்து விட்டதாக அவரது குரு பழனி கூறியதையடுத்து, ஜீவசமாதி அடைந்துவிட்டதாக எண்ணிய அவனது பெற்றோர்  உடலை சொந்த நிலத்தில் அடக்கம் செய்து வழிபட்டு வந்தனர். 

arani

இந்நிலையில் இந்த விவகாரம் ஊர் முழுவதும் பரவியது. மேலும் சிலர் சிறுவன் உயிருடன் இருக்கும் போதே புதைத்து விட்டதாகவும் கூறினர். இதனால் இது குறித்து விவரம் அறிந்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சிறுவனின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய  உத்தரவிட்டுள்ளார். மேலும் சிறுவனின் உடலை அங்கேயே  உடற்கூறு ஆய்வு செய்ய மருத்துவக்குழு சென்றுள்ளது. இதனால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

arani

சிறுவனின் உடலை சித்தர்களை அடக்கம் செய்வது போல் உட்கார்ந்த நிலையில் அடக்கம் செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் வாசிக்க: பொன்பரப்பி பிரச்னை; திமுக பிரமுகர் உயிருக்கு ஆபத்து?!..