சாமானியரின் கையில் தலைநகர்! அரவிந்த் கெஜ்ரிவாலின் வெற்றிக்கு காரணம்?

 

சாமானியரின் கையில் தலைநகர்! அரவிந்த் கெஜ்ரிவாலின் வெற்றிக்கு காரணம்?

டெல்லியில் 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி. இதனால் மீண்டும் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வாகிறார். 70 இடங்கள் உள்ள டெல்லி சட்டப்பேரவையில் 63 இடங்களை ஆம் ஆத்மியும், 7 இடங்களை பாஜகவும் முன்னிலை வகிக்கிறது.

டெல்லியில் 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி. இதனால் மீண்டும் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வாகிறார். 70 இடங்கள் உள்ள டெல்லி சட்டப்பேரவையில் 63 இடங்களை ஆம் ஆத்மியும், 7 இடங்களை பாஜகவும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் மற்றும் மற்றக் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

arvind kejriwal

ஹரியானாவில் குக் கிராமத்தில் 1968ம் ஆண்டு பிறந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஓர் பொறியாளர் ஆவார். அதன்பின் தன்னுடன் பணிபுரிந்த சுனிதாவை அரவிந்த் கெஜ்ரிவால்1995ம் ஆண்டு மணம் முடித்தார். அன்னை தெரேசாவுடன் 2 மாதக்கலாம் சமூகப்பணியாற்றும் வாய்ப்பை பெற்ற இவருக்கு அடிப்படையிலேயே  மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதுவரை 2 முறை ஆட்சி செய்த அரவிந்த் கெஜ்ரிவால் அப்படி டெல்லிக்கு என்னதான் செய்தார் என்ற கேள்வி அனைவருக்கும் எழும். 

அரவிந்த் கெஜ்ரிவால் செயல்படுத்திய திட்டங்கள்:

* 20,000 லிட்டர் வரை மாதாந்திர குடிநீர் பயன்பாட்டுக்கு கட்டணம் கிடையாது,

* 200 யூனிட் வரை மாதாந்திர மின்சார நுகர்வுக்கு கட்டணம் கிடையாது. 

* அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டது

* புதிதாக 30 பள்ளிகள் திறப்பு

*12-ஆம் வகுப்பு வரை இலவச கல்வி

* 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை அதிகரிப்பு 

 

arvind kejriwal

*வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது

*தனியார் பள்ளிகளில் கட்டண உயர்வுக்கு நெறிமுறை

* நகரம் முழுவதும் 35 லட்சம் மரங்களை நட்டார்

* மூத்த குடிமக்கள், பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்

* காற்று மாசை கட்டுப்படுத்த ஒற்றை இரட்டை வாகன இயக்க திட்டம் அறிமுகம்

*பொது இடங்களில் இலவச வைபை திட்டம் அறிமுகம்