சாப்பிட்டவுடன் படுத்தால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்? 

 

சாப்பிட்டவுடன் படுத்தால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்? 

சாப்பிட்ட உடனேயே படுக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனாலும், பெரும்பாலும் நிறைய பேருக்கு சாப்பிட்டு முடித்தவுடன் படுத்தால் தான் தூக்கம் நன்றாக வருவது போலிருக்கும். இன்னும் சிலர் இரவு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, இரவு சாப்பாட்டை 10 மணிக்கு மேல் சாப்பிட்டு 12 மணிக்கு மேல் தூங்கச் செல்வார்கள். இரண்டுமே தவறான பழக்கம் என்கிறார்கள்.

சாப்பிட்ட உடனேயே படுக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனாலும், பெரும்பாலும் நிறைய பேருக்கு சாப்பிட்டு முடித்தவுடன் படுத்தால் தான் தூக்கம் நன்றாக வருவது போலிருக்கும். இன்னும் சிலர் இரவு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, இரவு சாப்பாட்டை 10 மணிக்கு மேல் சாப்பிட்டு 12 மணிக்கு மேல் தூங்கச் செல்வார்கள். இரண்டுமே தவறான பழக்கம் என்கிறார்கள்.  பொதுவாகவே இரவு உணவை 7 மணியிலிருந்து 7.30க்குள் சாப்பிட்டு முடித்து விடுவது நல்லது. இரவு உணவை உட்கொண்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து உறங்கச் செல்வது தான் நன்மை தரும். இதுவே ஆரோக்கியமான உணவுப் பழக்கம். ஆனால் இன்று நிறையப்பேர் 10 அல்லது 11 மணிக்கு இரவு உணவைச் சாப்பிட்டு விட்டு கழுவிய கை காய்வதற்குள் படுக்கையில் விழுந்து தூங்கி விடுகிறார்கள். இது மிகவும் ஒரு தவறான செயலாகும்.

sleep

சின்னக்குழந்தைகள், வயதான முதியவர்கள் இந்த இரண்டு நிலையிலும் உள்ளவர்களுக்கு சாப்பிட்டவுடன் ஏற்படுகிற களைப்பில் இவர்கள் படுத்தால் உடனேயே தூங்கி விடுவார்கள். அப்படி உணவை உட்கொண்ட உடனேயே தூங்கச் செல்வதால் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து ஆபத்தை விளைவிக்கத் துவங்குகிறது என்று தெரியுமா? சரியாக செரிமானமாகாத இரவு உணவு, தூக்கத்தில் மூச்சு விடும் போது நுரையீரலுக்குச் செல்லும் அபாயம் இருக்கிறது. அப்படி நிகழும் போது மூச்சுத்திணறல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதிலும் இரவு செரிப்பதற்கு எளிமையான உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு உணவை முடித்த பின்னர் மிதமான நடைப்பயிற்சி, சிறு சிறு வீட்டு வேலைகள் என பழக்கிக் கொண்டு இரண்டு மணி நேரம் கழித்து தூங்கச் சென்றால் உடலுக்கு மிகவும் நல்லது.