‘சாப்பிடுறதுக்கு முன்னாடி போய் எச்சி பண்ணி வைக்காதீங்க’ : சினிமா விமர்சகர்களை சாடிய ஏ.ஆர். முருகதாஸ்

 

‘சாப்பிடுறதுக்கு முன்னாடி போய் எச்சி பண்ணி வைக்காதீங்க’ : சினிமா விமர்சகர்களை சாடிய ஏ.ஆர். முருகதாஸ்

தமிழ் சினிமாவில் வெறுக்க வைக்கும் விஷயம், அளவுக்கு அதிகமான விமர்சகர்கள் என்று இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளதற்குத் தயாரிப்பாளர் தனஞ்செயன் கருத்து தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் வெறுக்க வைக்கும் விஷயம், அளவுக்கு அதிகமான விமர்சகர்கள் என்று இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளதற்குத் தயாரிப்பாளர் தனஞ்செயன் கருத்து தெரிவித்துள்ளார். 

சினிமா விமர்சகர்கள் என்றால் முன்பெல்லாம் விரல்விட்டு எண்ணும்படியாக மட்டுமே இருந்தார்கள் . ஆனால்  தற்போது வளர்ந்து வரும் இணையப் பயன்பாட்டில் நூற்றுக்கணக்கான யூ ட்யூப் சேனல்கள் மற்றும் விமர்சகர்கள் உருவாகி விட்டார்கள். ஒருபடம் வெளியான சில மணிநேரங்களில் படம் எப்படி இருக்கு? என்ற தலைப்பில் குறைந்தது பத்து வீடியோக்களாவது நம் மொபைலில் நோட்டிபிகேஷனில்  வந்து எட்டி பார்க்கும். இன்னும் சிலர் இதுபோன்ற விமர்சனங்களைப் பார்த்த பிறகு தான்  தியேட்டருக்கு செல்லலாமா வேண்டாமா என்றே முடிவெடுக்கின்றனர். இவற்றில் சில நேர்மையான விமர்சகர்களும் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள். 

arm

இந்நிலையில்  இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் பிரபல பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தமிழ் சினிமாவில் தங்களை பிரமிக்க வைக்கும் விஷயம் மற்றும்  வெறுக்க விஷயம் எது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பிரமிக்க வைப்பது புது புது சிந்தனையோடு வரும் இளம் இயக்குநர்கள். வெறுக்க வைக்கும் விஷயம்… அளவுக்கு அதிகமான விமர்சகர்கள். ஆள் ஆளுக்கு  இப்படி எடுத்திருக்கலாம் அப்படி எடுத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். உப்பு அதிகமாக இருக்கு..காரம் கம்மியா இருக்கு என்று நீ ஏம்பா சொல்லுற அத நானே தெரிஞ்சிக்குறேன்.  அதுக்கு முன்னாடி நீ ஏன்  போய்  எச்சி பண்ணி வைக்குற? என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

 

இதை தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள  தயாரிப்பாளர் தனஞ்செயன்,  ஏ.ஆர். முருகதாஸ் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். தற்போது விமர்சனங்கள் ஊதியம் தரும் தொழிலாக மாறியுள்ளது. வருங்காலத்தில் இது சவாலாக இருக்கும்!’ என்று பதிவிட்டுள்ளார்.