சாப்பிடும்போதாவது செல்போனை தொடாதீர்கள்! – போப் பிரான்சிஸ் அறிவுரை

 

சாப்பிடும்போதாவது செல்போனை தொடாதீர்கள்! – போப் பிரான்சிஸ் அறிவுரை

குறைந்தபட்சம் சாப்பிடும்போதாவது செல்போனை தொடாதீர்கள். அந்த நேரத்திலாவது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் பேசுங்கள் என்று போப் பிரான்சிஸ் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

square

கடந்த ஞாயிற்றுக்கிழமை வத்திகானில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் நடந்த பிரார்த்தனைக்குப் பிறகு போப் பிரான்சிஸ் மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, “நம்முடைய குடும்பத்தினருடன் பேசுவது குறைந்துவிட்டது. உங்களுக்கு எப்படி ஒருவர் ஒருவருடன் உறவாட வேண்டும், பேச வேண்டும் என்பது தெரிந்தும், உங்கள் உணவு மேசையில் அமைதி நிலவுகிறது.

pope

ஒவ்வொருவரும் மொபைல் போனில் உரையாடிக்கொண்டிருக்கின்றீர்கள். தந்தையர்கள், பெற்றோர்கள், குழந்தைகள், தாத்தா பாட்டிகள், சகோதர சகோதரிகள் என ஒவ்வொருவருக்குமான இன்றைய சவால், மனம் விட்டுப் பேசுங்கள். இயேசு, மரியாள், சூசையப்பர் தினமும் உழைத்தார்கள், பிரார்த்தனை செய்தார்கள், ஒருவர் ஒருவருடன் பேசினார்கள். இதுபோன்ற ஒரு குடும்பமாக நம்முடைய குடும்பம் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

eat

போப் பிரான்சிஸ் செல்போன்களை தவிர்க்கும்படி கூறுவது இது முதல் முறையில்லை, செல்போனில் நேரத்தைச் செலவிடுவதைத் தவிர்த்து குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள், பேசுங்கள், குறைந்தபட்சம் திருப்பலிக்கு வரும்போதாவது மொபைல் போனை எடுத்து வராதீர்கள். சாப்பிடும்போது, தூங்கச் செல்வதற்கு முன் மொபைல் போனை எடுக்காதீர்கள் என்று தொடர்ந்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.