சாப்பாட்டுப் பிரியர்களுக்கான சிறந்த தாபாக்கள் லிஸ்ட்!

 

சாப்பாட்டுப் பிரியர்களுக்கான சிறந்த தாபாக்கள் லிஸ்ட்!

தமிழகத்தைப் பொறுத்தவரை பேருந்தில் பயணம் செய்வோருக்கு விழுப்புரம், மதுரை, நாமக்கல் பகுதிகளின் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் ஹோட்டல்கள் மிகவும் பரிட்சயமானதாக உள்ளன.

நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வோர் சிறிது நேரம் இளைப்பாரவும், புத்துணர்ச்சி மேற்கொள்ளவும் தஞ்சமடைவது நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கும் தாபாக்களில்தான். இந்திய நெடுஞ்சாலைகளில் மிகவும் ருசியான உணவை அளிக்கும் சிறந்த தாபாக்களின் எவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பன்முக கலாச்சாரம் கொண்ட நம் நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு விதமான உணவு பழக்கவழக்கம் கடைபிடிக்கப்படுகின்றன. அந்த வகையில் பயணம் மேற்கொள்வோருக்கு வசதியாக தற்போது நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் வித்தியாசமான உணவு வகைகளை பரிமாறும் தாபாக்கள் உள்ளன.

food

தமிழகத்தைப் பொறுத்தவரை பேருந்தில் பயணம் செய்வோருக்கு விழுப்புரம், மதுரை, நாமக்கல் பகுதிகளின் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் ஹோட்டல்கள் மிகவும் பரிட்சயமானதாக உள்ளன. அதேபோன்று வட இந்தியாவில் பல்வேறு பிரபலமான நெடுஞ்சாலை ஹோட்டல்களை தாபா என்று அழைக்கிறார்கள்.

இவற்றில் உணவு பிரியர்களுக்கு என்று சில குறிப்பிட்ட தாபாக்கள் வித்தியாசமான, அதேசமயம் பாரம்பரியம் மிக்க உணவுகளை வழங்கி வருகின்றன. கண்டிப்பாக வட இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டால் மிஸ் செய்யக்கூடாத தாபாக்களின் பட்டியல் இதோ!

ஷுக்தேவ் தாபா, ஜி.டி. சாலை

pic1

சிறிய குடிசை தாபாவாக இருந்த இது சிறந்த தாபாக்களின் பட்டியலில் இணைய காரணமாக அமைந்திருப்பது பாரம்பரியமான பஞ்சாபி வகை உணவுகளை பரிமாறுவதன் சிறப்பு தான். கிராமிய உணவு பிரியர்களுக்கும், சைனீஸ் வகை விரும்பிகளுக்கும் சிறந்த இடமாக திகழ்கிறது. தேசிய நெடுஞ்சாலை 1-இல் முர்தால் என்ற கிராமம் பகுதிக்கு அருகே மிகவும் பிரமாண்டமான கட்டடத்தில் அமைந்துள்ளது.

இங்கு மிஸ் செய்யக்கூடாத உணவுகள் – அமிரிஸ்தரி குல்சா, ஆலு பரத்தா

கர்ணல் ஹவேலி, முர்தால்

pic 2

முர்தால் பகுதியில் அமைந்திருக்கும் மற்றொரு புகழ்பெற்ற தாபாவாக கர்ணல் ஹவேலி திகழ்கிறது. இந்த உணவகத்தின் சிறப்பாக பஞ்சாபி ரொட்டி, சார்சன் கா சாங் (கீரை கிரேவி) உணவுகள் அமைந்துள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த தாபாவில் அனைத்து வயதினருக்குமான உணவுகளும் பரிமாறப்படுகிறது. 

இங்கு மிஸ் செய்யக்கூடாத உணவுகள் – காதி (மோர்க் குழம்பு), அமிரிஸ்தரி சோலே (கொண்டைக்கடலை மசாலா). காதி பக்கோடா

பாப்பி கா தாபா

pic 3

சிம்லா செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை 22ல் அமைந்துள்ளது. 1975ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த உணவகம் உள்ளூர்வாசிகள் பேவரிட்டாக திகழ்கிறது. பல்வேறு விதமான பக்கோடாக்கள், சீசனுக்கு தகுந்த உணவுகள் பரிமாறப்படுவது இந்த உணவகத்தின் சிறப்பு. 

இங்கு மிஸ் செய்யக்கூடாதவை – பன்னீர் பக்கோடா, நூடுல்ஸ் சமோசா, இஞ்சி டீ

சன்னி தா தாபா

pic4

பழைய மும்பை – புணே நெடுஞ்சாலையில் இருக்கும் லோனோவாலா நகர் அருகே அமைந்துள்ளது இந்த உணவகம். இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவகமாக அமைந்திருக்கும் இதில் ருசியான உணவும், மகிவும் ரம்மியமான சூழலில் உட்கொள்ளும் விதமும் காரணமாகவ இருக்கிறது. 

இங்கு மிஸ் செய்யக்கூடாத உணவுகள் – ராஜோலி கபாப், தந்தூரி போம்ஃபிரட், தால் பட்டி, ஜிலேபி

ரஸ்ஸெல் பஞ்சாபி தாபா

pic 5

பாரத் ஹிந்து  ஹோட்டல் என்று அழைக்கப்படும் இந்த தாபா, கொல்கத்தாவில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான உணவகமான இதில், மிகக் குறைந்த விலையில் நிறைவான உணமை உட்கொள்ளலாம். நள்ளிரவு வரை திறந்திருக்கும் தாபாவில் அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கும்.

இங்கு மிஸ் செய்யக்கூடாத உணவுகள் – சூடான மசாலா டீ, காரசாரமான சமோசா, கேசரி லஸ்சி, சிக்கன் பராத்தா