“சாப்பாட்டுக்கே கஷ்டம்; குழந்தையை பார்த்துக்க முடியல” : 2 மாத பச்சிளம் குழந்தையை சாலையில் விட்டு சென்ற தாய்!

 

“சாப்பாட்டுக்கே கஷ்டம்; குழந்தையை பார்த்துக்க முடியல” : 2 மாத பச்சிளம் குழந்தையை சாலையில் விட்டு சென்ற தாய்!

இதனால் சாமானிய மக்களுக்கும் தினக்கூலிகளும் கையில் பணம் இல்லாமல் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர். 

இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 11,487 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 393 பேர் பலியாகியுள்ளனர்.  இதனால் நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்களுக்கும் தினக்கூலிகளும் கையில் பணம் இல்லாமல் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர். 

ttn

இந்நிலையில் ஊரடங்கால் குழந்தையை கவனிக்க முடியவில்லை என்று 2 மாத குழந்தையை அதன் தாய் சாலையில் விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அடையாறு பத்மநாபன் நகர் 5வது குறுக்கு தெருவில் சர்ச் எதிரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அப்போது அந்த குழந்தையுடன் ஒரு கடிதமும் சிக்கியது. அதில்,  “ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வேலை இல்லாம கஷ்டப்படுறேன்… என் பிள்ளையை பார்த்துக்க பணம் இல்லை” என்று எழுதப்பட்டிருந்தது. 

tt

இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது,  பெண் ஒருவர் தன் முகத்தை புடவையால் மூடிக்கொண்டு குழந்தையை விட்டுச் செல்வது பதிவாகியிருந்தது. 

இதை தொடர்ந்து மீட்கபட்ட குழந்தை அம்மா ரோந்து வாகனம் மூலம் அண்ணா நகரில் உள்ள குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.