‘சாப்பாடு கொடுக்கும் சாக்கில் சரக்கு சப்ளை’-உணவு நிறுவன சீருடையில் நடந்த மோசடி ..  

 

‘சாப்பாடு கொடுக்கும் சாக்கில் சரக்கு சப்ளை’-உணவு நிறுவன சீருடையில் நடந்த மோசடி ..  

கர்நாடக மாநிலம் டோடா டோகோருவைச் சேர்ந்த ஜெய்பால் ரெட்டியும்,ஹராலுருவைச் சேர்ந்த அவரது நண்பர்  ராஜூவும்  (28) இந்த ஊரடங்கு நேரத்தில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டம் போட்டனர்

பெங்களூரு சோமசுந்தரபல்யாவில் வாடிக்கையாளர்களுக்கு சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக  உணவு விநியோகம் செய்பவர்  கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் டோடா டோகோருவைச் சேர்ந்த ஜெய்பால் ரெட்டியும்,ஹராலுருவைச் சேர்ந்த அவரது நண்பர்  ராஜூவும்  (28) இந்த ஊரடங்கு நேரத்தில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டம் போட்டனர். அதன்படி இருவரும் சேர்ந்து ஊரடங்குக்கு முன்பே மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்தனர் . இப்போது ஊரடங்கு அமல் படுத்திய பிறகு ஒரு உணவு ஆர்டர் ஆப் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு மது வழங்கி வந்துள்ளனர்.
அவர்கள் ஒரு பாட்டிலுக்கு 300 %லாபம் வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர் .செவ்வாய்கிழமையன்று  ஜெய்பால் ஒரு உணவு கம்பெனி சீருடையில் உணவு எடுத்துக்கொண்டு போவது போல சரக்கு எடுத்துக்கொண்டு போனபோது போலீசார் வழிமறித்து சோதனையிட்டபோது அவரிடம் சரக்கு பாட்டில் இருப்பது கண்டு அதிர்ச்சியுற்றனர் .பிறகு அவரை கைது செய்து அவரிடமிருந்த சரக்கு பாட்டில்களை பறிமுதல் செய்தனர் .அவரின் rகூட்டாளிmanikandan (1326)யை தேடி வருகின்றனர் .