சான்ஸுக்காக உடலை காட்டுகிறார்கள்; நாய்க்கு கூட பேனர் வைக்கிறார்கள்: பிரபல பாடகர் ஆவேசம்!

 

சான்ஸுக்காக உடலை காட்டுகிறார்கள்; நாய்க்கு கூட பேனர் வைக்கிறார்கள்: பிரபல பாடகர் ஆவேசம்!

நாய்க்குக் கூட கட்-அவுட் வைக்கும் கலாச்சாரம் அறுவெறுப்பை உண்டாக்குவதாகப் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

திருப்பதி: நாய்க்குக் கூட கட்-அவுட் வைக்கும் கலாச்சாரம் அறுவெறுப்பை உண்டாக்குவதாகப் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

திருப்பதியில் நடந்த காலட்சேப நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மேடையில் பேசியதாவது:-  ‘ஒரு சபையில் அமரும் போது எவ்வாறு உடை அணிய வேண்டும் என்பது கூட ஹிரோயின்கள் தெரியவில்லை. இதை அறியாமை என்பதா அல்லது வேறு ஏதேனும் சொல்வதா? உடலைக் காட்டினால் மட்டுமே ஹீரோவும் தயாரிப்பாளரும் சினிமாவில் சான்ஸ் தருவார்கள் என்று எண்ணும் நிலை உருவாகியுள்ளது இத்தகைய கீழ்நிலைக்கு எண்ணங்கள் மாறியுள்ளன. இதை உரக்கச் சொல்வதில் எனக்கு எந்தவிதமான கவலையும்  இல்லை. சினிமா பணம் சம்பாதிக்கத்தான், ஆனாலும் கண்ணியம் தேவை’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘செல்பி, பிளக்ஸ் இந்த இரண்டு வார்த்தைகள் கேட்டாலே வெறுப்பாக இருக்கிறது. வீட்டில் ஒரு நாய் குட்டியை ஈன்றால் கூட அதற்கு ரோட்டில் பிளக்ஸ் பேனர் வைக்கின்றனர். யாரென்றே தெரியாவிட்டாலும் அவருக்கும் பிளக்ஸ் பேனர். அந்த பேனர்களில் இருக்கும் முகங்களைப் பார்க்கமுடிகிறதா? காசை வாரி இறைத்து பேனர் வைக்கின்றனர். ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனம் என்பது போல் யாருக்கோ  கல்யாணம் என்றால் கூட பிளக்ஸ் வைக்கின்றனர். செல்பி, பிளக்ஸ் இந்த இரண்டும் எனக்குப் பிடிக்காதவை, நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? என்று தெரியவில்லை’ என்று கூறினார்.