சானிடைசர், மாஸ்க் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை

 

சானிடைசர், மாஸ்க் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் அடுத்தவர்களை தொடும் மூலமாக நமக்கும் பரவும் என்பதால் முகமூடி மற்றும் சானிடைசர்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் அடுத்தவர்களை தொடும் மூலமாக நமக்கும் பரவும் என்பதால் முகமூடி மற்றும் சானிடைசர்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தி வருகிறது. இதனால் பல இடங்களில் மாஸ்க் மற்றும் சானிடைசர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனிடையே இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் விலையை அதிகப்படுத்தி விற்கின்றனர். இந்நிலையில், குறிப்பிடபட்ட விலையை விட அதிக விலைக்கு விற்றால் உரிய நடவடிக்கை எடுக்கபடும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ttn

மாஸ்க், சானிடைசர் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் எடையளவு சட்டமுறை விதிகளின் படி பொருளின் விலை குறித்த அனைத்து தகவலையும் அச்சிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பிடப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்றால் புகார்களுக்கென செயல்பட்டு வரும் ஆப் மூலமாகவும், இ-மெயில் மூலமாகவும்,  044- 24321438 என்ற தொலைபேசி எண்ணின் மூலமும் புகார்கள் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.