சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்தினால் எவ்வளவு நேரம் நீடிக்கும்?

 

சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்தினால் எவ்வளவு நேரம் நீடிக்கும்?

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததில் இருந்து முன்பை விட இப்போது மிகவும் அதிகமாக எழும் கேள்வி…கை சுத்தம் உங்கள் கைகளில் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பதாகும்.

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததில் இருந்து முன்பை விட இப்போது மிகவும் அதிகமாக எழும் கேள்வி…கை சுத்தம் உங்கள் கைகளில் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பதாகும்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின்படி, குறைந்தது 60 சதவீத ஆல்கஹால் கொண்ட ஹேண்ட் சானிடைசரை (Hand Sanitizer) பயன்படுத்துவதே வைரஸைத் தடுப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். ஆனால் இவை எவ்வளவு நேரம் கைகளில் வேலை செய்கின்றன?

கை சுத்தம் நீண்ட நேரம் வேலை செய்யாது. இதனால் சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுவது அனைவரின் முதல் தேர்வாக இருக்க வேண்டும். இருப்பினும் ஆல்கஹால் சார்ந்த சானிடைசர்கள் சோப்பு மற்றும் தண்ணீருக்கு வசதியான மாற்றாகும். கைகளை கழுவுவது உண்மையில் கிருமிகளை நீக்க மட்டுமே செய்யும். ஆனால் சானிடைசர்கள் உங்கள் கையில் உள்ள அனைத்து வைரஸ்களையும் கொன்று விடும். ஆனால் நீங்கள் மற்றொரு அசுத்தமான மேற்பரப்பைத் தொட்டவுடன், உங்கள் கைகள் மீண்டும் அழுக்காகின்றன. எனவே, கை கழுவுவதும் அல்லது சானிட்டிசரைப் பயன்படுத்துவதும் உங்கள் கைகளை ஓரிரு நிமிடங்களுக்கு மேல் சுத்தமாக வைத்திருக்காது.

ttn

உங்கள் கைகளை சுத்தம் செய்து முடித்ததும் எந்த வகையிலும் வைரஸ் எச்சங்கள் எஞ்சியிருக்காது. ஆனால் மற்றொரு அழுக்கு மேற்பரப்பைத் தொடுவதன் மூலம் உடனே உங்கள் கைகளை மீண்டும் வைரஸ்கள் அடைந்து விட வாய்ப்புண்டு.

நீங்கள் ஏதாவது சாப்பிட முடிவு செய்வதற்கு முன் அல்லது உங்கள் முகத்தைத் தொடுவதற்கு முன் நீங்கள் மீண்டும் உங்கள் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் 10 நிமிடங்களுக்கு முன்பு அவற்றை சுத்தம் செய்திருந்தாலும் பரவாயில்லை.

ttn

சானிடைசரை பயன்படுத்தும்போது ​​உங்கள் கைகளின் அனைத்து மேற்பரப்புகளையும் மூடி, அவை வறண்டு போகும் வரை அவற்றை ஒன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கைகளில் இருக்கும் அதிக அழுக்கை வெறும் கண்களால் பார்க்க கூடிய அளவில் இருந்தால் எந்த சானிடைசரும் வேலை செய்யாது.

உங்கள் கைகளை சரியாகக் கழுவ சோப்புடன் உங்கள் கைகளை குறைந்தது 20 விநாடிகள் தேய்க்கவும். விரல்களுக்கும் உங்கள் கைகளின் பின்புறத்திற்கும் இடையிலும் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். நக இடுக்குகள் மற்றும் நகத்தின் மேற்புறத்தையும் நன்கு கழுவ முயற்சி செய்யுங்கள்!