சானிடைசரில் 60% ஆல்கஹால் இருக்கும் என்ற விளம்பரத்தால் விபரீதம்! மதுவுக்கு பதிலாக சானிடைசரை குடித்தவர் மரணம்!!

சானிடைசரில் 60% ஆல்கஹால் இருக்கும் என்ற விளம்பரத்தால் விபரீதம்! மதுவுக்கு பதிலாக சானிடைசரை குடித்தவர் மரணம்!!

ஊரடங்கால் மதுபானக்கடைகள் மூடப்பட்டதன் காரணமாக பல குடிநோயாளிகள் திடீரென அப்பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் தவறான முடிவகளை தேடும் சம்பவங்கள் நடந்துவருகின்றன. ஒரு நபர் சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்து உயிரிழந்த பரிதாபம் தற்போது கோவையில் நடந்துள்ளது. 

குளிர்பானத்தில் வார்னிஷ் கலப்பது, ஷேவிங்லோசனை கலப்பது, பெட்ரோல் பஞ்சர் ஒட்டும் லோஷனை பயன்படுத்துவது போன்ற விபரீதங்களில் குடிநோயாளிகள் ஈடுபட்டுவருகிறார்கள். இதுபோன்ற ஆபத்தான முயற்சிகளில் இதுவரை ஆறு பேர் உயிரிழந்த நிலையில், கோவையில் சானிடைசரில் தண்ணீர் கலந்துகுடித்த ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

death

சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பெர்னார்ட் என்ற இந்த 35 வயது நபர்,  கோவை சூலூரில்  வசித்து வந்தார். இவரது நிறுவனத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அனைவருக்கும் சானிடைசர்கள் அளித்திருந்தனர்.  சானிடைசரில் 60 சதவிகிதம் ஆல்கஹால் இருக்கும் என்பதால் அதில் தண்ணீர் கலந்து குடித்துள்ளார். ஒருநாள் முழுவதும் கண்விழிக்காமல் இருந்ததை கண்டு குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக  சூலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்