சாதி ஒடுக்குமுறையை எதிர்ப்பவன்; அநாகரீக வார்த்தைகளுக்கு உடன்பட்டவன் இல்லை: இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்!

 

சாதி ஒடுக்குமுறையை எதிர்ப்பவன்; அநாகரீக வார்த்தைகளுக்கு உடன்பட்டவன் இல்லை: இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்!

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் அரங்கேறிய தாக்குதல் குறித்து தன்  பெயரில் வெளியான அறிக்கைக்கு இயக்குநர் வெற்றிமாறன் மறுப்பு தெரிவித்துள்ளார். 

அரியலூர்: அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் அரங்கேறிய தாக்குதல் குறித்து தன்  பெயரில் வெளியான அறிக்கைக்கு இயக்குநர் வெற்றிமாறன் மறுப்பு தெரிவித்துள்ளார். 

vote

நாடாளுமன்ற மக்களவை வாக்குபதிவின் போது அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியில் நடந்த வன்முறைச் சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறன், சாதி வெறியாட்டத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளதாக அறிக்கை ஒன்று வெளியானது. 

ponparappi

இருப்பினும் இது குறித்து வெற்றிமாறனை அணுகி நாம் கேட்டபோது, ‘ சாதியின் பெயரால் ஒரு சமூகத்தை இன்னொரு சமூகம் ஒடுக்குமுறைக்கு ஆளாக்குவதை எப்போதும் நான் எதிர்க்கிறேன். அதே நேரத்தில் என் கருத்துக்களை வெளிப்படுத்த இது போன்ற வார்த்தைகளை நான் எப்போதும் பயன்படுத்துவதில்லை.  சாதி வன்முறையாட்டத்தை நான் எதிர்பவனாக இருப்பினும், இது போன்ற அநாகரீக வார்த்தைகளுக்கு உடன்பட்டவன் இல்லை. என் பெயரில் சரியான செய்தி தவறான முறையில் பரப்பப்படுகிறது’ என்றார்.

இதையும் வாசிக்க: ‘ரத்தவெறி கொண்டு ஆடுது பூமி’ : மருதநாயகம் பாடலை வெளியிட்ட கமல் ; எதற்காக தெரியுமா?