சாதி இல்லாத சமூகமாக வாழும் தமிழர்கள்!? உண்மையான தமிழனாக இருந்தால் ‘ஷேர்’ பண்ணவும் என; மொக்க மேட்டரை தட்டிவிடும் தமிழனுக்கு இது தெரியுமா? 

 

சாதி இல்லாத சமூகமாக வாழும் தமிழர்கள்!? உண்மையான தமிழனாக இருந்தால் ‘ஷேர்’ பண்ணவும் என; மொக்க மேட்டரை தட்டிவிடும் தமிழனுக்கு இது தெரியுமா? 

மணிப்பூர் பர்மா பார்டரில் இருக்கும் மோரே என்கிற நகரம் ஒரு குட்டித் தமிழ்நாடு. இப்போது இந்தியா மியன்மார் பார்டரில் புதிய சாலைகள் அமைத்து எல்லையை திறந்து விட்டு இருப்பதால் மணிப்பூர் தமிழர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்

மணிப்பூர் பர்மா பார்டரில் இருக்கும் மோரே என்கிற நகரம் ஒரு குட்டித் தமிழ்நாடு. இப்போது இந்தியா மியன்மார் பார்டரில் புதிய சாலைகள் அமைத்து எல்லையை திறந்து விட்டு இருப்பதால் மணிப்பூர் தமிழர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களது அறுபதாண்டு கணவுகள் நனவாகும் காலம் வந்துவிட்டது.


கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த கதை அது.போன நூற்றாண்டின் துவக்கத்தில் காரைக்குடி பகுதியில் இருந்து பர்மா,மலேசியா சிங்கப்பூர் தொடங்கி தாய்லாந்து வரை தமிழர்கள் பரவி வியாபாரம் செய்து செழித்து வாழ்ந்தார்கள்.


myanmar

இரண்டாம் உலகப்போரின் போது அவர்களில் பெரும்பகுதியினர் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.மீதி இருந்தவர்களை 1960களில் பர்மாவில் ஏற்பட்ட இராணுவ ஆட்சி கப்பலேற்றி இந்தியாவுக்கு அகதிகளாக அனுப்பி வைத்தது. அவர்களில் பல பேரால் சென்னை வாழ்க்கைக்கு தங்களை பழக்கிக் கொள்ள முடியவில்லை.ஏனென்றால் அவர்களெல்லாம் பர்மாவிலேயே பிறந்து வளர்ந்தவர்கள்.


myanmar

இந்தியாவும்,தமிழகமும் அவர்களுக்கு அந்நிய தேசம் சென்னையில் வாழவிருப்பமில்லாத அவர்கள் மீண்டும் மணிப்பூர் பர்மா எல்லைக்கே திரும்பிப் போனார்கள். ஆனால் அவர்களை பர்மாவுக்குள் நுழைய இராணுவம் அனுமதிக்கவில்லை.அதனால் எல்லைப்புற நகரமான மோரேயிலேயே அவர்கள் தங்கிவிட்டார்கள்.


இன்று மோரே நகரின் மக்கள் தொகை 35000.இதில் சரிபாதி,அதாவது 17500 பேர் தமிழர்கள்.சில நூறு  நேப்பாளிகள்,பஞ்சாபிகள் தவிர மற்றவர் குக்கீஸ் எனப்படும் உள்ளூர் பழங்குடியினர்.இப்போது இந்தியாவிலிருந்து பர்மாவுக்குச் செல்லும் சாலை வழி திறந்துவிட்டதால் மோரே தமிழர்கள் பர்மாவுக்குள் பயணம் செய்து தங்களது முன்னோர் வாழ்ந்த இடங்களை பார்த்துவர அனுமதிக்கிறார்கள்.


myanmar

மோரே நகரில் வாழும் தமிழர்கள் பர்மாவுக்கு போகவேண்டும் என்றால் கல்கதாவந்து இப்போது யங்கூன் ஆகிவிட்ட ரன்கூனுக்கு விமாணத்தில்தான் போகவேண்டும் என்கிற நிலை இப்போது இல்லை.


மியன்மார்

2018 ஆகஸ்டில் எல்லை திறக்கப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப் பட்டதும் அவர்களுக்கு ஒரு புதிய உலமே திறந்துவிட்டது.இப்போது மோரேயில் இருந்து பஸ் பிடித்தே பர்மாவுக்கு அல்லது இன்றைய மியான்மருக்குள் போகலாம் தாங்கள் வாழ்ந்த வீடுகளை,தங்களது பழைய நிலங்களை,வீடுகளைப் பார்க்கலாம் என்பது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது.


myanmar

தமிழகத்தில் இருந்து சமையல் பாத்திரங்கள்,ஜவுளி ரகங்களை கொண்டுபோய் மியன்மாரில் விற்கிறார்கள்.அங்கிருந்து தேக்குமரம் போன்றவற்றை இந்தியாவுக்கு கொண்டு வருகிறார்கள்.மோரே நகர் சேம்பர் ஆஃப் காமர்சின் தலைவராக இருக்கும் சேகர் என்பவரை உள்ளூர் மக்களே சேகர் அண்ணா என்றுதான் அழைக்கிறார்.


மோரே தமிழ்சங்க செயலாளர் எஸ்.எம் கனேசனும் பர்மாவுக்குள் போய் தன் முன்னோர்கள் வாழ்ந்த ஊரைப்  பார்த்து வந்திருக்கிறார்.ஒரு காலத்தில் 10 லட்சம் தமிழர்கள் பர்மாவில் வாழ்ந்தார்களாம்.அவர்களில் பலரும் உள்ளூர் இளைஞர்களையும் பெண்களையும் மணந்து வாழ்ந்திருக்கிறார்கள். 


myanmar

சென்னையில் இருந்து சிற்பிகளை அழைத்துபோய் ஆறுநிலை ராஜகோபுரத்தூடன் அங்காளபரமேஸ்வரி கோவில்கட்டி இருந்தாலும் இப்போதும் மோரே அப்படித்தான்.நடப்பவை அனைத்துமே காதல் திருமணங்கள்தான்! தமிழர்கள் சாதி இல்லாத சமூகமாக வாழ்வது மணிப்பூரில் மட்டும்தான் என்பது இன்னொரு அதிசய செய்தி!


myanmar