சாதிப்பற்று இருப்பதில் தவறில்லை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு

 

சாதிப்பற்று இருப்பதில் தவறில்லை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு

சாதிப்பற்று இருப்பதில் எந்த தவறுமில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: சாதிப்பற்று இருப்பதில் எந்த தவறுமில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் அகில இந்திய நாடார் பேரவை சார்பில் நாடார் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டார். விழாவில் பேசிய அவர், `எப்படி ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு மரபணு இருக்கிறதோ, அதேபோன்று ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு மரபணு இருக்கிறது. அந்த மரபணுவில் அந்த சமுதாயத்தின் அடையாளங்கள் ஊறி இருக்கிறது. சாதியப்பற்று இருப்பது தவறில்லை. சாதிய வெறிதான் இருக்கக்கூடாது.

இன்னொரு சாதியை காலி பண்ண வேண்டும் என்ற எண்ணம் இருக்கக் கூடாது. தனது சமுதாயம் வளர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. உலகத்தில் எந்த நாட்டிலும் இது கிடையாது என்று பேசினார். அவரது இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சாதி வெறிக்கு அடிப்படை காரணமாக இருக்கும் சாதிப்பற்று தவறில்லை என அமைச்சர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என பல்வேறு தரப்பினர் கூறி வருகிறார்கள். மேலும், தமிழகத்தில் ஆணவ கொலைகள் அதிகரித்து வரும் சூழலில் சாதிப்பற்று இருப்பது தவறில்லை என மாஃபா பாண்டியராஜன் பேசியிருப்பது ஆணவ கொலைகள் செய்பவர்களுக்கு அமைச்சர் ஆதரவாக இருக்கிறாரோ என்ற அச்சம்