சாதிக்க அழகு முக்கியமல்ல…. அதற்கு இவரே சான்று!!

 

சாதிக்க அழகு முக்கியமல்ல…. அதற்கு இவரே சான்று!!

கோரமான முகம், உயரம் குறைவு, பார்த்தால் வெறுக்கும்படியான ஒரு தோற்றம்… ஆனால் சாதனையோ பெரிது அதற்கு உதாரணம் இந்த காட்ஃப்ரே பாகுமா… யார் இவர்? அப்படி என்ன சாதனை செய்தார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

கோரமான முகம், உயரம் குறைவு, பார்த்தால் வெறுக்கும்படியான ஒரு தோற்றம்… ஆனால் சாதனையோ பெரிது அதற்கு உதாரணம் இந்த காட்ஃப்ரே பாகுமா… யார் இவர்? அப்படி என்ன சாதனை செய்தார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

உகாண்டா நாட்டில் வசித்து வருபவர் காட்ஃப்ரே பாகுமா. இவருக்கு 47 வயதாகிறது. இவர் பிறக்கும் போதே வினோத தலை, குள்ள உருவம், கோர முகம் என ஒரு வித ஊனத்துடனே பிறந்துள்ளார். இவரின் உருவத்தை வைத்து இவரை பலர் கேலி, கிண்டல் செய்து ஒதுக்கி வைத்துள்ளனர். இவருக்கு சிறு வயதிலிருந்தே பாடுவதில் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. யார் என்ன கிண்டல் செய்தாலும் இவர் பாடுவதை மட்டும் நிறுத்தவே இல்லை… இப்படி அயராது உழைப்பு, கடினமான முயற்சியினால் இன்று பெரிய பாப் பாடகராக அவதரித்துள்ளார். 

Pop star

தனது வெற்றிக்குறித்து பூரிப்பான முகத்துடன் பாகுமா கூறுகையில், ”என்னுடைய உருவத்தை பார்த்து சிறுவயதிலிருந்தே பல பேர் கிண்டல் செய்தனர். மேலும் சிலர் என்னை விநோதமாக பார்த்தனர். இதெற்கெல்லாம் முதலில் வருத்தப்பட்டேன். ஆனால் போக போக எனக்கு அது பழகிவிட்டது. எனக்கு சிறுவயதிலிருந்த இசை மீது அலாதி ப்ரியம். என் திறமையை பார்த்து எனக்கு பலர் பாட வாய்ப்பு வழங்கினார்கள். பின்னர் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் என் மனைவி என்னை விட்டு போய்விட்டார். பிறகு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். என்னுடைய இசைக்கு தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இசை துறையில் மேலும் நான் சாதிப்பேன்” எனக்கூறினார்.