சாதிக்கயிறு அணியும் மாணவ மாணவியர்: தடுக்க கூடாது என்று சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் செங்கோட்டையன்

 

சாதிக்கயிறு அணியும் மாணவ மாணவியர்: தடுக்க கூடாது என்று சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளில் மாணவ, மாணவியர் வண்ணக்கயிறு கட்டவும், நெற்றியில் திலகமிடுவதையும் தடுக்கக்கூடாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  

சாதிக்கயிறு அணியும் மாணவ மாணவியர்: தடுக்க கூடாது என்று சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: பள்ளிகளில் மாணவ, மாணவியர் வண்ணக்கயிறு கட்டவும், நெற்றியில் திலகமிடுவதையும் தடுக்கக்கூடாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  

பள்ளிக்கல்வித் துறைக்கு  2018 தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் சார்பில் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது. அதில், மாணவர்கள் தங்கள் சாதிகளை வெளிப்படுத்தும் வகையில் அவர்களின் கைகளில் கயிறுகள் கட்ட கட்டப்படுவதாகவும்,அதில் மஞ்சள், சிவப்பு, பச்சை , காவி போன்ற நிறங்கள் அடங்கும் என்றும் இதன் மூலம் பள்ளி மாணவர்களின் சாதிகள் கண்டுபிடிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது. 

இதையடுத்து மாணவர்களைச் சாதிவாரியாகக் கயிறுகள் கட்டச் சொல்லும் பள்ளிகளை மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி,  கண்டறிந்து,  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டார். 

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறு கட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது தனது கவனத்திற்கு வரவில்லை. ஆகவே மாணவ, மாணவியர் வண்ணக்கயிறு கட்டவும், நெற்றியில் திலகமிடுவதையும் தடுக்கக்கூடாது. இருப்பினும் சாதி, மத அடிப்படையில் கட்டப்பட்டுள்ளதா என்பதை அந்தந்த பள்ளி நிர்வாகமே கண்டுபிடிக்க வேண்டும்’ என்றார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு இந்த விவகாரம் செல்லவில்லை என்பது உண்மையா? அப்படியே இருந்தாலும் இந்த விவகாரத்தை ஆமோதிக்கும் வகையில் அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.