‘சாதாரண பைக்கெல்லாம் வேணாம்.. 1 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள பைக் தான் டார்கெட்’… போலீஸ் வலையில் சிக்கிய இளைஞர்கள் !

 

‘சாதாரண பைக்கெல்லாம் வேணாம்.. 1 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள பைக் தான் டார்கெட்’… போலீஸ் வலையில் சிக்கிய இளைஞர்கள் !

துரைப்பாக்கத்தை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் தனது பைக்கை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் தனது பைக்கை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பைக்கை திருடி சென்ற நபர்கள் ஆட்டோவில் திருடிச் சென்றதாக அந்த நபர் சிசிடிவி காட்சிகளையும் கொடுத்துள்ளார். அதே போல அந்த பகுதியில் பல்வேறு பைக் காணாமல் போன புகார்கள் எழுந்துள்ளன. அதனால், துரைப்பாக்கம் காவல்துறையினர் தனிப்படை காவலர்களை அமைத்துக் கண்காணித்து வந்துள்ளனர். அந்த  பகுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளையும் சோதனை செய்துள்ளனர். 

ttn

அதில், ஆட்டோ பதிவு எண்ணை வைத்து கரண்குமார் , அஜித்குமார் மற்றும் கோடீஸ்வரன் ஆகிய மூன்று இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் கண்ணகி நகரைச் சேர்ந்தவர்கள் என்றும் துரைப்பாக்கத்தில் உள்ள 1 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள பைக்குகளை மட்டும் நோட்டமிட்டு அதிகாலை 2 மணிக்கு ஆட்டோவில் சென்று திருடி வந்ததும் தெரிய வந்துள்ளது. 

ttn

மேலும், அவர்கள் பைக்கோடு சேர்த்து ஹெல்மெட்களையும் திருடுவது மட்டுமல்லாமல் செயின் பறிப்பு, பிக் பாக்கெட் போன்றவற்றிலும் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த பைக், ஆட்டோ உள்ளிட்ட அனைத்தையும் பறிமுதல் செய்து விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.