சாதாரண குளியல் சோப்புதான்! ஆனா பாருங்க….. ரூ.2 ஆயிரம் கோடியை அசால்ட்டா கொடுத்துட்டு!

 

சாதாரண குளியல் சோப்புதான்! ஆனா பாருங்க….. ரூ.2 ஆயிரம் கோடியை அசால்ட்டா கொடுத்துட்டு!

இந்திய நுகா்பொருள் சந்தையில் முதல் முறையாக உள்நாட்டு தயாரிப்பான சந்தூர் சோப் ரூ.2 ஆயிரம் கோடிக்கு (ஓர் ஆண்டு) மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

நம்ம எல்லார்க்கிட்டேயும் டெய்லி நல்லா சோப்பு போட்டு குளிக்கும் பழக்கம் உண்டு. உடனே இப்பம் இருக்கிற தண்ணீர் கஷ்டத்துலயும் நீங்க டெய்லி குளிக்க முடியாமன்னு கேள்வி கேட்பீங்க. சரிங்க குளிக்காவிட்டாலும் முகத்தையாவது கழுவோம். அதற்கும் சோப்பு பயன்படுத்துவோம். லைபாய் முதல் டவ் வரையிலான விதவிதமான சோப்புகளை பயன்படுத்துகிறோம்.

லக்ஸ்

நாம பயன்படுத்துற இந்த சோப்புகள் பின்னால பெரிய வர்த்தகமே உள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் தங்களது சோப்புகளை நம்மிட்ட விக்க படாதபாடு படுகின்றன. இந்துஸ்தான் யூனிலீவர், விப்ரோ, ஐ.டி.சி. உள்ளிட்ட நிறுவனங்கள் குளியல் சோப்பில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வெளிநாட்டு நிறுவனமான யூனிலீவரின் இந்திய நிறுவனம்தான் இந்துஸ்தான் யூனிலீவர். தங்களது லைபாய், லக்ஸ் பிராண்ட் குளியல் சோப்புகள் முறையே ஆண்டுக்கு ரூ.2,000 கோடி மற்றும் ரூ.1,000 கோடிக்கு மேல் விற்பனையாகிறது என இந்துஸ்தான் யூனிலீவர் கூறுகிறது.

குளியல்

இந்த நிலையில், உள்நாட்டு நிறுவனமான விப்ரோ கன்ஸ்யூமர் அண்டு லைட்டிங் நிறுவனம் தனது சந்தூர் பிராண்டு சோப்பு ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் விற்பனையாகி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து முதல் முறையாக ஒர் ஆண்டில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் விற்பனையான முதல் உள்நாட்டு குளியல் சோப்பு என்ற சாதனையை சந்தூர் படைத்ததுள்ளதாக அந்த நிறுவனம் பெருமையுடன் கூறி வருகிறது.