‘சாதாரண குடும்பத்து பொண்ணு தான்…’ நடிகர் யோகி பாபுவுக்கு திருமணம்!

 

‘சாதாரண குடும்பத்து பொண்ணு தான்…’ நடிகர் யோகி பாபுவுக்கு திருமணம்!

அதே மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சிட்டாங்க. நானும் மாப்பிள்ளை  ஆகிட்டேன்’ என்று கூறியுள்ளார். 

சின்னதிரை மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் யோகிபாபு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். குறிப்பாக அஜித், விஜய், சூர்யா ஆகியோருடன் நடித்துள்ள அவர் தனது கடின உழைப்பால் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தர்பாரில் இணைந்துள்ளார். இவர் சமீப காலமாக ஹீரோவாகவும் பல படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான தர்ம பிரபு, கூர்கா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 

சமீபத்தில் யோகி பாபு திருமண கோலத்தில் ஒரு பெண்ணுடன் இருப்பது போல புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது.இதனால் யோகிபாபுவுக்கு திருமணம் என்ற செய்தி பரவியது.  இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த யோகி பாபு, ‘என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன்’ என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ttn

இந்நிலையில், தற்போது உண்மையிலேயே யோகி பாபுவுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது.  இதுகுறித்து பிரபல இணையதள ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஆமாங்க எனக்கு  உண்மையில் கல்யாணம் தான். இல்லனா 3 மாதத்திற்கு  ஒருமுறை திரிஷா கூட கல்யாணம், நயன்தாரா கூட கல்யாணம்ன்னு சொல்லிடுறாங்க. அவங்க பேரு பார்கவி. வீட்டுல எல்லாரும் சேர்ந்து பார்த்துருக்காங்க. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான். எனக்கு மட்டுமில்ல, வீட்டுல இருக்கிற எல்லாருக்கும் பிடிச்சிடுச்சு. எனக்கு மனைவியா வரப்போறவங்க என் குடும்பத்தை நல்லா பார்த்துக்கணும். அதே மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சிட்டாங்க. நானும் மாப்பிள்ளை  ஆகிட்டேன்’ என்று கூறியுள்ளார். 

ttn

யோகி பாபு -பார்கவி திருமணம்  எளிமையான முறையில் திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறவுள்ளதாம். இதனால் திருமண வரவேற்பில் நடிகர் நடிகைகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.