சாதனை பெண்களுக்கு சமூக ஊடக பக்கம்… சஸ்பென்ஸ் உடைத்த மோடி!

 

சாதனை பெண்களுக்கு சமூக ஊடக பக்கம்… சஸ்பென்ஸ் உடைத்த மோடி!

மார்ச் 2ம் தேதி இரவு திடீரென்று சமூக ஊடக பக்கங்களிலிருந்து வெளியேற யோசித்துவருவதாக ட்வீட் செய்தார். இதனால் பா.ஜ.க-வினர் அதிர்ச்சியடைந்தனர். வெளியேற வேண்டாம் என்று சமூக ஊடகங்களை பா.ஜ.க ஆதரவாளர்கள் ஆக்கிரமிப்பு செய்தனர். நோ சார் என்ற ஹேஷ் டேக் டிரெண்ட் ஆனது. சமூக ஊடக பக்கங்களிலிருந்து வெளியேற வேண்டாம், தப்பான எண்ணத்தைத் தூண்டும் வகையில் பதிவிடுவதை நிறுத்தினாலே போதும் என்று பலரும் விமர்சனம் செய்தனர்.

மகளிர் தினத்தில் சாதனை பெண்களுக்கு தங்கள் பதிவுகளை வெளியிட தன்னுடைய சமூக ஊடக பக்கத்தை அளிக்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

modi-90

மார்ச் 2ம் தேதி இரவு திடீரென்று சமூக ஊடக பக்கங்களிலிருந்து வெளியேற யோசித்துவருவதாக ட்வீட் செய்தார். இதனால் பா.ஜ.க-வினர் அதிர்ச்சியடைந்தனர். வெளியேற வேண்டாம் என்று சமூக ஊடகங்களை பா.ஜ.க ஆதரவாளர்கள் ஆக்கிரமிப்பு செய்தனர். நோ சார் என்ற ஹேஷ் டேக் டிரெண்ட் ஆனது. சமூக ஊடக பக்கங்களிலிருந்து வெளியேற வேண்டாம், தப்பான எண்ணத்தைத் தூண்டும் வகையில் பதிவிடுவதை நிறுத்தினாலே போதும் என்று பலரும் விமர்சனம் செய்தனர். அதே நேரத்தில் மோடி ஏதோ ஒரு கருத்தை சொல்ல வருகிறார் என்று பலரும் பதிவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று ஒரு ட்வீட் செய்துள்ளார் மோடி. அதில், இந்த மகளிர் தினத்திற்கு, மற்றவர்களுக்கு உந்து சக்தியாக வாழும் பெண்களுக்காக என்னுடைய சமூக ஊடக பக்கங்களை விட்டுக்கொடுக்கிறேன். இது லட்சக்கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்த உதவும். அப்படிப்பட்ட பெண்களா நீங்கள் #SheInspiresUs என்ற ஹேஷ்டேக் உடன் உங்களைப் பற்றி பதிவிடுங்கள்” என்று கூறியுள்ளார். மேலும் இவர்களுக்கு “நரேந்திர மோடியின் சமூக ஊடக பக்கங்களை ஒரு நாள் மட்டும் நிர்வகிக்க அனுமதி வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. “உங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் உலகத்துடன் பகிர்ந்துகொள்ளுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது.