சாதனையில் அடாவடி காட்டும் ‘விஸ்வாசம்’ சாங்க்ஸ்; தல ரசிகர்கள் ஹாப்பி!

 

சாதனையில் அடாவடி காட்டும் ‘விஸ்வாசம்’ சாங்க்ஸ்; தல ரசிகர்கள் ஹாப்பி!

தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை: தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

4வது முறையாக சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்த இப்படத்தின் ‘அடிச்சி தூக்கு’, ‘வேட்டிக்கட்டு’ பாடல்களை தொடர்ந்து அனைத்து பாடல்களும், தீம் மியூசிக்கும் வெளியானது.

இப்படத்தின் ஆடியோ உரிமத்தை பெற்றிருந்த லஹரி மியூசிக் நிறுவனம் ‘விஸ்வாசம்’ படத்தின் பாடல்களை நேற்று வெளியிட்டது. மதுரை பின்னணியில் இப்படத்தின் கதை உருவாகியுள்ளதால் படத்தின் மெரும்பாலான பாடல்கள் பட்டையை கிளப்பி வருகிறது.

இதுவரை விஸ்வாசம் ஜூக் பாக்ஸ் வீடியோக்களை யூடியூபில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களை பெற்றுள்ள இந்த பாடல்களுக்கு 6 ஆயிரத்துக்கும் அதிகமாக டிஸ்லைக்குகளும் கிடைத்துள்ளன. இதனால் தல ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்தாலும், இப்படத்தின் பாடல்கள் தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.