சாதனைப் படைத்த தளபதியின் படங்கள்! 

 

சாதனைப் படைத்த தளபதியின் படங்கள்! 

என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான ரசிகர்களே என்ற வசனத்தாலோ என்னவோ விஜயின் 90 சதவீத படங்கள் வசூலை அள்ளியது என்றே சொல்லலாம். 

இளைய தளபதி விஜய் அவர்கள் 25 வருடங்களாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனது கொடியை பறக்கவிட்டு வருகிறார். தனது திரையுலக பயணங்களில் விஜய் சந்தித்த வெற்றி படங்கள் பற்றி பார்க்கலாம். 

என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான ரசிகர்களே என்ற வசனத்தாலோ என்னவோ விஜயின் 90 சதவீத படங்கள் வசூலை அள்ளியது என்றே சொல்லலாம். 

இளைய தளபதி விஜய் அவர்கள் 25 வருடங்களாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனது கொடியை பறக்கவிட்டு வருகிறார். தனது திரையுலக பயணங்களில் விஜய் சந்தித்த வெற்றி படங்கள் பற்றி பார்க்கலாம். 

vijay

தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கி விஜய் திரையுலகிற்கு அறிமுகமான முதல் திரைப்படமான நாளைய தீர்ப்பு தோல்வியில் முடிந்தது. முதல் படமே தோல்வியில் முடிந்ததால் விஜய் சோர்ந்துபோகவில்லை, சினிமாவை விட்டு விலகவும் இல்லை… சீறிய முயற்சியினால் தொடர்ந்து போராடி நடித்தார். 

அதன்பின் அவர் நடித்த பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ் மோர் மற்றும் காதலுக்கு மரியாதை ஆகிய படங்கள் 100 நாட்களுக்கு மேல் திரையரங்களில் ஓடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.  இதேபோல் துள்ளாத மனமும் துள்ளும் படமும் விஜய்க்கு ஒரு திருப்பு முனையாகவே அமைந்தது. 

kushi

இதையடுத்து வெளிவந்த குஷி, ஃபிரண்ட்ஸ் போன்ற திரைப்படங்களும் 100  நாட்களை கடந்து சாதனை படைத்தது. இன்றும் அந்த படங்களை டிவியில் போட்டால் பலர் பார்க்க தவறுவதில்லை. இதற்கு பின்பு விஜய் நடித்த கில்லி திரைப்படம் விஜயின் மாஸ் திரைப்படங்களில் ஒன்று என சொன்னால் தல ரசிகர்கள் கூட ஏற்றுக்கொள்வார்கள். அந்த அளவிற்கு வசூல் மழையை வாரி வழங்கியது. இதையடுத்து 2007 ஆம் ஆண்டு வெளிவந்த போக்கிரி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பெற்றது. விஜயின் மார்க்கெட்டை வளர்த்தது. 

vijay

இதேபோல் வேட்டைக்காரன் திரைப்படமும் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் வெற்றியை அடைந்தது. அதன்பிறகு விஜய்க்கு சுக்ர திசை தொடங்கியது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நண்பன் மற்றும் துப்பாக்கி திரைப்படம் 100 கோடிக்கும் மேலே வசூல் செய்து, விஜயை புகழின் உச்சிக்கே சென்று அமரவைத்தது. அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா மற்றும் கத்தி திரைப்படம் வசூல் ரீதியாக சூப்பர்ஹிட் தான். இதையடுத்து 2015 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் வெளிவந்த தெறி திரைப்படம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு திரையரங்குகளில் நின்று ஓடிய திரைப்படம். சமீபத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படமும் பல்வேறு சர்ச்சைகளை  தாண்டி திரைக்குவந்து வெற்றிகரமாக ஓடி 250 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இதையடுத்து வந்த அரசியல் நையாண்டி திரைப்படமான சர்க்காரும் இன்றைய அரசியல் நடைமுறைகளை எடுத்துவிளக்கும் படமாக வந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தது. 

vijay

வெற்றி படமோ தோல்வி படமோ என்றும் விஜய் ரசிகர்கள், அவரை விட்டுக்கொடுத்தது இல்லை. தோல்வி படங்களை எளிதில் கடந்து வெற்றிப்படங்களை கொண்டாடிவருவதில் தளபதி ரசிகர்களுக்கு நிகர் யாருமில்லை.