சாண்டியின் லேட்டஸ் போட்டோ: முகம் சுழிக்கும் நெட்டிசன்கள்!

 

சாண்டியின் லேட்டஸ் போட்டோ: முகம் சுழிக்கும் நெட்டிசன்கள்!

சாண்டி பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸை மட்டுமல்ல மக்களையும் கவர்ந்தவராக மாறிவிட்டார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்தாலும் போட்டியாளர்களின் புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி லைக்ஸை  குவித்து வருகிறது. 

பிக் பாஸ்  நிகழ்ச்சியின் 3வது சீசன் வெற்றிகரமாக முடிந்து விட்டது. இறுதிக் கட்டத்தை நான்கு  போட்டியாளர்கள் தொட்டநிலையில் முகின் பிக் பாஸ் டைட்டிலை வென்றுள்ளார். பிக் பாஸ் சீசன் 3 பெரிதும் பேசப்பட்டதற்குப் போட்டியாளர்கள் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக சாண்டி பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸை மட்டுமல்ல மக்களையும் கவர்ந்தவராக மாறிவிட்டார்.

sandy

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தும் கூட தர்ஷன், முகின், கவின் ஆகியோருடன் ஒன்றாக சுற்றி திரிந்து வரும் சாண்டி பிகில்  படத்தில் இடம்பெற்றுள்ள வெறித்தனம் பாடலுக்கும் நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

sandy

இந்நிலையில் சாண்டியின்  புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் சாண்டி, பாத்ரூம் கதவை திறந்து வைத்து போன் பேசிக் கொண்டே சிறுநீர் கழிக்கிறார். இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள்  இதெல்லாம் ஒரு ஜாலியாடா உங்களுக்கு என்று செல்லமாக திட்டி வருகின்றனர்.